Published : 11 Jul 2025 12:37 AM
Last Updated : 11 Jul 2025 12:37 AM

கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலி: கேட்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்​பவத்தை தொடர்ந்​து, ரயில்வே கேட்களில் பின்​பற்ற வேண்​டிய 11 நடை​முறை​களை இந்​திய ரயில்வே வெளி​யிட்​டுள்​ளது.

கடலூர் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்​தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாக​னம் மீது பாசஞ்​சர் ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​துக்கு கேட் கீப்​பரின் அலட்​சி​யம் ஒருகாரண​மாக இருந்​தா​லும், இந்த கேட்​டில் இன்​டர்​லாக்​கிங் செய்​யப்​ப​டா​மல் இருந்​தது மற்​றொரு காரண​மாக தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், ரயில்வே பாது​காப்பு விஷ​யங்​கள் தொடர்​பாக, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று முன்​தினம் அனைத்து ரயில்வே மண்டல அதி​காரி​களு​டன் காணொலி காட்சி வாயி​லாக ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த ஆலோ​சனைக்கு பிறகு, ரயில்வே கேட் அமைந்​திருக்​கும் லெவல் கிராசிங் பகு​தி​களில் பாது​காப்பை மேம்​படுத்​து​வதற்கு 11 முக்​கிய நடை​முறை​களை பின்​பற்​றும்​படி இந்​திய ரயில்வே துறை உத்​தர​விட்​டுள்​ளது. அதன்​படி, அனைத்து ரயில்வே கேட் பகு​தி​களி​லும் போதிய பதிவு அமைப்​புடன் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்த வேண்​டும்.

கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​படும் பகு​தி​களுக்கு தடை​யின்றி மின்​சா​ரம் கிடைக்க வழி​வகை செய்ய வேண்​டும். சோலார் சாதனம், பேட்​டரி மூல​மாக​வும் மின்​சா​ரம் வழங்​கலாம். இதை தீவிர​மாக கடைபிடிக்க வேண்​டும். இது​போல, அனைத்து ரயில்வே கேட்​களை​யும் இன்​டர்​லாக்​கிங் முறைக்கு மாற்ற வேண்​டும். இன்​டர்​லாக்​கிங் தொழில்​நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத ரயில்வே கேட்​களை நாள்​தோறும் ஆய்வு செய்​ய​வேண்​டும். ரயில்வே சுரங்​கப்​பாதை, மேம்​பாலம் அமைக்​கும் கட்​டு​மான பணி​களை துரிதப்​படுத்த வேண்​டும். இன்​டர்​லாக்கிங் செய்​யப்​ப​டாத கேட்களில் குரல் பதிவு அமைப்பு செயல்​படுத்​து​வதை உறு​திப்​படுத்த வேண்​டும். அனைத்து ரயில்வே கோட்​டங்​களி​லும் இன்​டர்​லாக்​கிங் செய்​யப்​ப​டாத ரயில்வே கேட் பகு​தி​களில், ரயில் வரு​வதை ஒலி பெருக்​கி​கள் மூல​மாக அறிவிக்க உத்​தர​வு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x