Published : 10 Jul 2025 05:45 AM
Last Updated : 10 Jul 2025 05:45 AM

தனியார் மயமாக்கல், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில். 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் எஸ்​ஆர்​எம்​யு, டிஆர்​இ​யு, எஸ்​ஆர்​இஎஸ் உள்​ளிட்ட ரயில்வே தொழிற்​சங்​கத்​தினர் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தனி​யார்​மய​மாக்​கல், பெரு (கார்ப்​பரேட்) நிறு​வனங்​களுக்கு ஆதர​வான மத்​திய அரசின் கொள்​கைகளை கண்​டித்​து, மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில், நாடு தழு​விய வேலை நிறுத்​தம் நேற்று நடை​பெற்​றது. இதன் ஒரு பகு​தி​யாக, தெற்கு ரயில்வே மஸ்​தூர் யூனியன் (எஸ்​.ஆர்​.எம்​.​யு.) சார்​பில், தெற்கு ரயில்​வே​யில் கிளை​கள் வாரி​யாக கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

தொழிலா​ளர் விரோத, 4 சட்ட தொகுப்​பு​களை திரும்​பப் பெறு​வது, ரயில்​வேயை தனி​யார்​மய​மாக்​கு​வதை கைவிடு​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்னை ரயில்வே கோட்​டத்​தில் எழும்​பூர், சென்ட்​ரல் உட்பட பல்​வேறு இடங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. எழும்​பூரில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் எஸ்​ஆர்​எம்யு துணை பொதுச்​செய​லா​ள​ரும், சென்னை கோட்ட தலை​வரு​மான பால் மேக்​ஸ்​வெல் தலைமை வகித்​துப் பேசி​னார்.

புதிய பென்​ஷன் திட்​டத்தை நீக்​கி​விட்​டு, பழைய பென்​ஷன் திட்​டத்தை அமல்​படுத்​து​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தட்​ஷிண ரயில்வே தொழிலா​ளர்​கள் சங்​கம் (டிஆர்​இ​யு) சார்​பில், தெற்கு ரயில்​வே​யின் பல்​வேறு கிளை​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சென்னை சென்ட்​ரலில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் டிஆர்​இயு பொதுச்​செய​லா​ளர் ஹரிலால் கலந்​து​கொண்டு பேசி​னார்.

எல்ஐசி மண்டல அலுவலக வாயிலில் வங்கி மற்றும்
காப்பீட்டு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: ம.பிரபு

ரயில்வே பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக, ரயில்வே காலி பணி​யிடங்​களை நிரப்​புவது, 8-வது ஊதி​யக் குழு​வுக்​கான விதி​முறை​களை உறு​தி​செய்​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தென்னக ரயில்வே ஊழியர்​கள் சங்​கம் (எஸ்​ஆர்​இஎஸ்) சார்​பில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

பெரம்​பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அச்​சங்​கத்​தின் செயல் தலை​வர் சூர்​யபிர​காஷ், நிர்வாக பொதுச்​செய​லா​ளர் சந்​திரசேகர் ஆகியோர் பங்​கேற்​றுப் பேசினர்.

இதற்​கிடை​யில், கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, ஹிந்த் மஸ்​தூர் சபா சார்​பில், அண்​ணா​சாலை தபால் நிலை​யம் முன்பு நடை​பெற்ற மறியல் போராட்​டத்​தில் எஸ்​ஆர்​எம்யு தலை​வரும், ஹிந்த் மஸ்​தூர் சபா தலை​வரு​மான ராஜா தர் கலந்து கொண்​டார். இதில் 13 தொழிற்​சங்​கங்​களை சேர்ந்த தலை​வர்​கள், தொண்​டர்​கள் என 1,000 பேர்​ கைது செய்​யப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x