Published : 09 Jul 2025 05:48 AM
Last Updated : 09 Jul 2025 05:48 AM
சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் இ.சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களிடமிருந்து, மும்பையி்ல் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது.
இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https//hajcommitee.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ‘ஹஜ் சுவிதா’ (HAJ SUVIDHA) செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம். ஹஜ் பயண வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் (https://hajcommittee.gov.in) தெரிந்து கொள்ளலாம்.
2025 ஹஜ் பயணத்துக்கான “நுசுக் மசார்” போர்ட்டலின் படி, பாஸ்போர்ட்டுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர், கடைசி பெயர் ஆகியவற்றை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயணிக்கு முதல் தவணை தொகையாக ரூ.1.5 லட்சத்தை செலுத்த வேண்டும். மேலும் ஹஜ் பயணிகள் எதிர்பாராத மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்துக்காக பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT