Published : 09 Jul 2025 06:14 AM
Last Updated : 09 Jul 2025 06:14 AM

திமுக வாக்குறுதி அளித்தபடி பணிநிரந்தரம் கோரி சென்னையில் போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் கைது

பணி நிரந்தரம் கோரி, சென்னை அண்ணாசாலை அருகே சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முயன்ற பகுதி நேர ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். | படங்கள்: ம.பிரபு |

சென்னை: பணிநிரந்​தம் செய்ய வலி​யுறுத்தி சென்​னை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி, தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதற்​கிடையே, ஆட்​சிக்கு வந்தால் தற்​காலிக ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள் என்று திமுக தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​தது.

அந்த கோரிக்​கையை நிறை வேற்ற வலி​யுறுத்தி சிறைநிரப்​பும் போராட்​டம் ஜூலை 8-ம் தேதி நடத்​தப்​படும் என்று பகு​திநேர ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டுக்​குழு அறி​விப்பு வெளி​யிட்​டது. இதையடுத்து, ஆசிரியர் சங்க நிர்​வாகி​களு​டன் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் மகேஸ் பொய்​யாமொழி நேற்று முன்​தினம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதில் உடன்​பாடு எட்​டப்​ப​டாத​தால் திட்​ட​மிட்​டப்​படி போராட்​டம் நடை​பெறும் என்று பகு​திநேர ஆசிரியர்​கள் அறி​வித்​தனர். இதையடுத்து, தமிழகம் முழு​வதும் பல்​வேறு பகு​தி​களில் பகு​திநேர ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை போலீ​ஸார் வீட்​டுக் காவலில் வைத்​தனர்.

அதை​யும் மீறி ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் சென்னை அண்ணா சாலை​யில் ஓமந்​தூரர் அரசு பல்​நோக்கு மருத்​து​வனை அருகே கூடினர். அப்​போது அங்கு வந்த போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர். மேலும், சென்னை எழும்​பூர், சென்ட்​ரல் ரயில் நிலை​யங்​கள் வழி​யாக போராட்​டத்​துக்கு வந்த ஆசிரியர்​களும் ஆங்​காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து பகு​திநேர ஆசிரியர்​கள் சிலர் கூறும்​போது, “பணி நிரந்​தரம் செய்​வோம் என்று திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருந்​தது. அதை நிறைவேற்ற வலி​யுறுத்தி பல்​வேறு கட்​டங்​களாக போராட்​டத்தை நடத்​தி​யுள்​ளோம். ஒவ்​வொரு முறை​யும் செய்து தரு​வ​தாக அமைச்​சர் மகேஸ் உறு​தி​யளிக்​கிறார். ஆனால், எது​வும் நடக்​க​வில்​லை. தமிழக அரசு பகு​திநேர ஆசிரியர்​களை தொடர்ந்​து வஞ்சிக்கிறது’’என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x