Published : 09 Jul 2025 04:47 AM
Last Updated : 09 Jul 2025 04:47 AM

தேர்தல் படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்: பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் திட்டவட்டம்

இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ். | படங்கள்: இரா.தினேஷ்குமார் |

விழுப்புரம்: ​பாமக சார்​பில் தேர்​தல் படிவங்​களில் இனி நான்​தான் கையொப்​பமிடு​வேன் என கட்சி நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். கட்​சி​யின் மாநில செயற்​குழுக்கூட்​டம் விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த ஓமந்​தூரில் நேற்று நடை​பெற்​றது. ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், கவுர​வத்தலை​வர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளி சங்​கர், பாட்​டாளி தொழிற்​சங்​கப் பேரவை பொதுச் செய​லா​ளர் முத்​துகு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர். இந்​தக் கூட்​டத்தை அன்​புமணி ஆதர​வாளர்​கள் புறக்​கணித்​தனர்.

கூட்​டத்​தில் நிறு​வனர் ராம​தாஸ் பேசும்​போது, “2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி அமைத்​துப் போட்​டி​யிட முடிவு செய்துள்ளோம். கூட்​டணி தொடர்​பான அதி​காரம் எனக்​குத் தரப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களை தேர்வு செய்​யும் பணியை விரைவில் தொடங்க உள்​ளோம். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வழங்​கப்​படும் ‘ஏ’, ‘பி’ படிவங்​களில் நான்​தான் கையொப்​பமிடு​வேன்.

கட்​சிக்​காக​வும், மக்​களுக்​காக​வும் பல ஆண்​டு​களாகப் போராடி வரு​கிறேன். என் வலியை உணர்ந்​தவர்​கள் இங்கு இருக்​கிறீர்​கள். இங்கு நிறைவேற்​றப்​பட்ட அரசி​யல் தீர்​மானத்​தின் மூலம் உங்​கள் சந்​தேகங்​கள் தீர்ந்​திருக்​கும். சந்​தேகப்​பட்​ட​வர்​களுக்கு இது மருந்​து. இங்கே வந்​தவர்​களுக்கு இதுவே விருந்​து. பூம்​பு​காரில் ஆகஸ்ட் 10-ல் நடை​பெறும் பாமக மகளிர் மாநாட்​டில் 2 லட்​சம் மகளிர் பங்​கேற்க வேண்​டும்” என்​றார்​.

திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் நடைபெற்ற பாமக செயற்குழு
கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அன்புமணிக்கு கண்டனம்: செயற்​குழுக் கூட்​டத்​தில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல், 2029 மக்​கள​வைத் தேர்​தலில் அதிக இடங்​களை ஒதுக்​கும் கூட்​ட​ணியை தேர்வு செய்​யும் அதி​காரத்தை நிறு​வனர் ராம​தாஸுக்கு அளிப்​பது, தலை​மை​யின் உத்​தர​வுக்கு கட்​டுப்​ப​டா​மல் கட்​சியை பலவீனப்​படுத்​தும் நபர்​கள் மீது கட்சி விதி​களின்​படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்​பது, பொது வெளி​யில் நிறு​வனர் மற்​றும் தலை​வர் ராம​தாஸுக்​கும், கட்​சிக்​கும் களங்​கத்தை ஏற்​படும் செயல் தலை​வரின் (அன்​புமணி) செயலை வன்​மை​யாக கண்​டித்​து, அவர் மீது நடவடிக்கை எடுக்​கும் அதி​காரத்தை ராம​தாஸுக்கு வழங்​கு​வது, விளை பொருட்​களுக்​கான குறைந்​த​பட்ச ஆதார விலையை இரட்​டிப்​பாக வழங்​கு​வது, உயர் நீதி​மன்​றத்​தில் தமிழை வழக்​காடு மொழி​யாக்​கு​வது உள்​ளிட்ட 25 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

பாமக செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட ராமதாஸின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

செயற்​குழுக் கூட்​டம் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தா​லும், கூட்​டத்​தில் பங்​கேற்க தகுதி உள்​ளவர்​கள் மட்​டுமின்​றி, அனைத்து நிலை​யில் உள்​ளவர்​களும் பங்​கேற்​றனர். அன்​புமணி மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் புறக்​கணிப்​பார்​கள் என்​பதை முன்​கூட்​டியே தெரிந்​திருந்த காரணத்​தால், அனை​வருக்​கும் அனு​மதி வழங்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

6 பேர் தீக்குளிக்க முயற்சி: செயற்​குழுக் கூட்​டம் முடிந்த பின்​னர் ராம​தாஸ் தைலாபுரம் திரும்​பினார். அப்​போது, திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்​த​வாசி​யைச் சேர்ந்த தமிழ்ச்​செல்​வன், கார்த்​திக், விஜயன், முரு​கன், ஜெகதீசன், சின்​னக்​குட்டி ஆகியோர் திடீரென தங்​கள் மீது பெட்​ரோல் ஊற்​றி, தீக்​குளிக்க முயன்​றனர். போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்​தினர். ராம​தாஸ்​-அன்​புமணி இரு​வரும் இணைய வேண்​டும் என்​ப​தற்​காக தீக்​குளிக்க முயன்​ற​தாக அவர்​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x