Published : 08 Jul 2025 05:30 AM
Last Updated : 08 Jul 2025 05:30 AM

காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

சென்னை: ​சென்னை தேனாம்​பேட்​டை​யில் காங்கிரஸ் அறக்​கட்​டளைக்கு சொந்​த​ மாக பல கோடி ரூபாய் மதிப்​புள்ளநிலம் உள்ளது. காம​ராஜர் அரங்​கத்​துக்கு அரு​கில் அமைந்துள்ள இந்த நிலத்​தில் வணிக வளாகம் கட்​டு​வதற்​காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறு​வனத்துடன் காங்கிரஸ் அறக்​கட்​டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது.

அதன்​பிறகு அந்த நிறு​வனம் வசம் ஒப்​படைக்​கப்​பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்​பாக ஆட்​சேபமில்லா சான்று வழங்கப்படாத​தால் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் தனி​யார் நிறு​வனத்​துடன் செய்து கொண்ட ஒப்​பந்​தம் காலா​வ​தி​யாகி​விட்​ட​தாகக் கூறி அந்த நிலத்தை காங்​கிரஸ் அறக்​கட்​டளை தனது வசம் கையகப்​படுத்​தி​யது.

காங்கிரஸ் அறக்​கட்​டளை​யின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து தனி​யார் நிறு​வனம் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி அப்​துல் குத்​தூஸ் முன்​பாக நேற்று விசாரணைக்கு வந்​தது.

அப்​போது தனி​யார் நிறு​வனம் தரப்​பில், “இந்த வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது அந்த நிலத்தை காங்​கிரஸ் அறக்​கட்​டளை நிர்​வாகி​கள் தங்​களது கட்​டுப்​பாட்​டில் சுவாதீனம் எடுத்​துக்​கொண்​ட​தால், இந்த வழக்கு செல்​லாத​தாகி​விட்​டது. ஆகவே வழக்கை திரும்​பப் பெற அனு​ம​தி​யளிக்க வேண்​டும்” என்று கேட்​கப்​பட்​டது. அதையேற்ற நீதிப​தி, காங்​கிரஸ்​ அறக்​கட்​டளைக்​கு எதி​ரான இந்த வழக்​கை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x