Published : 08 Jul 2025 05:21 AM
Last Updated : 08 Jul 2025 05:21 AM

ரூ.15 லட்சம் அபராதம்: அமைச்சர் நேருவின் சகோதரர் மீதான வழக்கு நிபந்தனையுடன் ரத்து

சென்னை: பொதுத்​துறை வங்​கி​யில் கடன் பெற்​று, மோசடி செய்​த​தாக அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது சிபிஐ பதிவு செய்​திருந்த வழக்கை நிபந்​தனை​யுடன் ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, அபராத​மாக தலா ரூ.15 லட்​சத்தை சிபிஐ-க்​கும் மாநில சமரச தீர்வு மையத்​துக்​கும் செலுத்த உத்​தர​விட்​டது.

வங்​கி​யிட​மிருந்து கடந்த 2013-ம் ஆண்டு வாங்​கிய ரூ. 30 கோடி கடனை தனது சகோதர நிறு​வனங்​களுக்கு திருப்​பி​விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​ட​தாகக் கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்​.ர​விச்​சந்​திரன் இயக்​குந​ராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்ற தனி​யார் நிறு​வனத்​துக்கு எதி​ராக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

அதன்​படி சிபிஐ கடந்த 2021-ம் ஆண்டு ரவிச்​சந்​திரன் மற்​றும் ட்ரூ வேல்யூ ஹோமஸ், டிவிஎச் எனர்ஜி ரிசோர்​சஸ் இந்​தியா லிமிடெட் ஆகியவை மீது வழக்​குப்​ப​திவு செய்​தது. இதன் அடிப்​படை​யில் அமைச்​சர் கே.என்​.நேரு மற்​றும் என்​.ர​விச்​சந்​திரனுக்கு சொந்​த​மான இடங்​களில் அமலாக்​கத் துறை​ சோதனை நடத்​தி​யது. இந்​நிலை​யில், எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி ரவிச்​சந்​திரன் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுதாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்தி முன்​பாக நடந்​தது.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி நேற்று பிறப்​பித்த தீர்ப்​பு:இந்த வழக்​கில் மனு​தா​ரர் வங்​கி​யில் பெற்ற கடன்​தொகையை கடன் வசூல் தீர்ப்​பா​யம் மூல​மாக செலுத்​தி​யுள்​ளார். இதில் மோசடி எங்​கும் நடை​பெற​வில்​லை. மனு​தா​ரர் குறிப்​பிட்ட காலத்​துக்​குள் கடனை செலுத்​தி​யிருந்​தால் சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்திருக்​காது.

மேலும் மனு​தா​ரரின் இந்த செய​லால் சிபிஐ தனது நேரத்​தை​யும், உழைப்​பை​யும் வீணடிக்க நேரிட்​டுள்​ளது. ஆகவே மனு​தா​ரருக்கு ரூ. 30 லட்​சம் அபராதம் விதிக்​கப்​படு​கிறது. இதில் ரூ.15 லட்​சத்தை அவர் சிபிஐ-​யிட​மும், ரூ. 15 லட்​சத்தை மாநில சமரச தீர்வு மையத்​துக்​கும் 8 வார காலத்​துக்​குள் செலுத்த வேண்​டும். இந்த நிபந்​தனை​யுடன் குற்​றவழக்கு ரத்து செய்​யப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x