Published : 08 Jul 2025 05:01 AM
Last Updated : 08 Jul 2025 05:01 AM

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு  20% கூடுதல் இடம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: ‘நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் மாணவர் சேர்க்​கைக்கு கூடு​தலாக 20 சதவீதம் இடங்​கள் வழங்​கப்​படும்’ என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: உயர்​கல்வி அனை​வரை​யும் சென்​றடைய வேண்டும் என்​ப​தால் மாணவ, மாணவி​களுக்கு புது​மைப்​பெண், தமிழ்ப்​புதல்​வன் உள்​ளிட்ட சிறப்பு திட்​டங்​களை செயல்​படுத்​தி, திறன் மிகுந்த சமு​தா​யத்தை உரு​வாக்க நான் முதல்​வன் திட்​டத்​தின் கீழ் பல்​வேறு திறன் மேம்​பாட்டு பயிற்​சிகளை தமிழக முதல்வர் வழங்கி வரு​கிறார்.

இதன் காரண​மாக, கடந்த 4 ஆண்​டு​களில் உயர்​கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்​ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரு​கிறது. இந்​தி​யா​விலேயே மாணவர் சேர்க்கை விகிதத்​தில் தமிழகம் முதன்மை மாநில​மாக விளங்​கு​கிறது. நடப்பு கல்வி ஆண்​டில் கலை - அறி​வியல் கல்​லூரி​களில் சேர்க்​கைக்​காக அதி​கள​வில் மாணவர்​கள் விண்​ணப்​பித்து காத்​திருக்​கின்​றனர். அதைத்​தொடர்ந்து, இந்த ஆண்டு புதி​தாக 15 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்க முதல்​வர் ஆணை​யிட்​டார். அதன்​படி, 15 கல்லூரிகள் தற்​போது தொடங்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், உயர்​கல்வி பயில பெரு​மள​வில் மாணவர்​கள் காத்​திருப்​பதை அறிந்து அரசு கலை - அறி​வியல் கல்​லூரி​களுக்கு கூடு​தலாக 20 சதவீத மாணவர் சேர்க்கை இடங்​கள் உயர்த்தி வழங்​க​வும், அரசு உதவி பெறும் கல்​லூரி​களுக்கு 15 சதவீத இடமும், சுயநிதி கல்​லூரி​களுக்கு 10 சதவீத இடமும் கூடு​தலாக வழங்​க​வும் முதல்​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதன்​படி, கூடு​தல் இடங்​களுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே, மாணவர்​கள் இந்த நல்​வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x