Published : 08 Jul 2025 12:41 AM
Last Updated : 08 Jul 2025 12:41 AM

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 5 டிகிரி உயரும் 

சென்னை: தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று (ஜூலை 8) இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஓரிரு இடங்​களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்​தில் பலத்த தரைக்​காற்று வீசக்​கூடும். நாளை முதல் 13-ம் தேதி வரை ஒருசில இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

வெப்​பநிலை 5 டிகிரி உயரும்: தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்​றும், நாளை​யும் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​ விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவுக்குஉயர வாய்ப்பு உள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. வெப்​பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை இருக்​கக்​கூடும்.

சூறாவளி காற்று வீசும்: தென் தமிழக கடலோர பகு​தி​கள், மன்​னார் வளை​கு​டா, அதைஒட்​டிய குமரிக்​கடல் பகு​தி​களில்இன்று அதி​கபட்​சம் 65 கி.மீ. வேகத்​தி​லும், வடதமிழகம், தெற்கு ஆந்​திர கடலோர பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள தென்​மேற்​கு, மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளி காற்று வீசக்​கூடும். எனவே, இந்த பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக நீல​கிரி மாவட்​டம் நடு​வட்​டத்​தில் 6 செ.மீ., அவலாஞ்​சி​யில் 5 செ.மீ., கோவை மாவட்​டம் சின்​னக்​கல்​லாறில் 4 செ.மீ., நீல​கிரி மாவட்​டம் விண்ட்​வொர்த் எஸ்​டேட், மேல் கூடலூர், மேல் பவானி, கோவை மாவட்​டம் சின்​கோ​னா, வால்​பாறை, ‘உபாசி’, சோலை​யாறில் 3 செ.மீ., நீல​கிரி மாவட்​டம் தேவாலா, கூடலூர் சந்​தை, பார்​வூட், பந்​தலூரில் 2 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x