Published : 06 Jul 2025 12:16 AM
Last Updated : 06 Jul 2025 12:16 AM

ரயில் முன்பதிவு பட்டியல் 8 மணி நேரத்துக்கு முன் வெளியீடு

சென்னை: ​​இந்​திய ரயில்​வே​யில் விரைவு ரயில்​கள் புறப்​படு​வதற்கு 4 மணி நேரத்​துக்கு முன்​பாக, முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடப்​படு​வது வழக்​க​ம். இதனால், கடைசி நேரத்​தில் டிக்​கெட் உறு​தி​யா​காத சூழலில், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் பெரிதும் சிரமப்​பட்​டனர். இதற்கு தீர்வு காண ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இதை தொடர்ந்​து, ரயில்​கள் புறப்​படு​வதற்கு 8 மணி நேரம் முன்​பாக, முன்​ப​திவு பட்டியலை வெளி​யிட வேண்​டும் என்று ரயில்வே வாரி​யம் பரிந்​துரை செய்​தது. அந்த வகை​யில், தெற்கு ரயில்​வே​யில் விரைவு ரயில்​கள் புறப்​படு​வதற்கு 8 மணி நேரம் முன்​பு, முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடும் நடை​முறை நேற்று அமலுக்கு வந்​தது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறும்போது, “அனைத்து ரயில்​களுக்​கும் 8 மணி நேரம் முன்​பாகவே முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடப்​படும். குறிப்​பாக, அதி​காலை 5 மணி முதல் மதி​யம் 2 மணி வரை புறப்​படும் ரயில்​களுக்கு முந்​தைய நாள் இரவு 9 மணிக்கே முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடப்​படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x