Published : 06 Jul 2025 12:03 AM
Last Updated : 06 Jul 2025 12:03 AM

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பதவி உயர்வு பட்டியல்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு

சென்னை: தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவகல்​லூரி மருத்​து​வ​மனை​களில், முதல்​வர் பதவிக்​கான முறை​யான பதவி உயர்வு பட்​டியல் தயாரித்து 4 வாரங்​களில் தகு​தி​யானவர்​களை முதல்​வர்​களாக நியமிக்க தமிழக அரசுக்​கு, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சுகா​தா​ரத் துறை​யில் அரசு உதவி மருத்​து​வ​ராக பணி​யில் சேரும் மருத்​து​வர்​களுக்கு அடுத்​த​படி​யாக இணை பேராசிரிய​ராக​வும், அதன்​பிறகு 3 ஆண்​டு​கள் பணி அனுபவத்​துடன் 4 ஆராய்ச்சி கட்​டுரைகளை வெளி​யிட்டு இருந்​தால் பேராசிரிய​ராக​வும் பதவி உயர்வு வழங்​கப்​படு​கிறது. பேராசிரிய​ராக 5 ஆண்​டு​கள் பணிபுரிந்து இருந்​தால் அடுத்​தக்​கட்​ட​மாக அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வ​ராக (டீன்) சிவில் மருத்​துவ பட்​டியலின்
பதவி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்​கப்​படுகிறது.

இந்​நிலை​யில், கடந்த 2024-25 ம் ஆண்​டுக்​கான பதவி உயர்வு பட்​டியலில் 26 பேராசிரியர்​களுக்கு முதல்​வ​ராக பதவி உயர்வு வழங்க கடந்​தாண்டு அக்​.1-ம் தேதி​யன்று அறி​விப்​பாணை வெளி​யிட்ட தமிழக அரசு, இதுதொடர்​பாக, ஆட்​சேபங்​களை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் இருந்​தும், அக்​.3-ம் தேதி​யன்​று, அதில் 14 பேருக்கு அரசு மருத்​து​வ​மனை​களின் முதல்​வ​ராக பதவி உயர்வு வழங்கி அரசாணை பிறப்​பித்​தது. அரசின் இந்த உத்​தரவை எதிர்த்து பாதிக்​கப்​பட்ட அரசு மருத்​து​வர்​கள் சிலர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

அந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிப​தி, இணைப் பேராசிரியர்​களாக இருந்த மனு​தா​ரர்​களுக்​கு, பேராசிரியர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்ட போதி​லும், கடந்த 2019-ம் ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல் மற்​றும் நீதி​மன்ற வழக்​கு​களைக் காரணம் காட்டி பதவி உயர்​வுக்​கான நியமன உத்​தரவு தாமத​மாக வழங்​கப்​பட்​டதற்கு மனு​தா​ரர்​களை குறை​கூற முடி​யாது. ஏற்​கெனவே, பேராசிரியர் பதவி உயர்​வுக்​கான கவுன்​சிலிங் கடந்த 2012-ம் ஆண்​டுக்​குப் பிறகு 7 ஆண்​டு​கள் கழித்து 2019-ம் ஆண்டு தான் நடை​பெற்​றுள்​ளது.

எனவே, விதி​களுக்கு புறம்​பாக 14 அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களின் முதல்​வர்​களாக பதவி உயர்வு அடிப்​படை​யில் நியமிக்​கப்​பட்​ட​வர்​களின் நியமனம் செல்​லாது என்​ப​தால் அதை ரத்து செய்​தும், பணிமூப்பு அடிப்​படை​யில் முறை​யான பட்​டியல் தயாரி்த்து தகு​தி​யானவர்​களுக்கு 4 வாரங்​களில் பதவி உயர்வு வழங்க வேண்​டும் என கடந்த பிப்​ர​வரி​யில் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்​து, ஏற்​க​னவே பதவி உயர்வு பெற்ற அரசு மருத்​து​வர்​கள் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுப்​பிரமணி​யன், கே.சுரேந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மேல்​முறை​யீட்டு வழக்​கின் மனு​தா​ரர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் அவி​னாஷ் வாத்​வானி, எஸ். தரன் ஆகியோ​ரும், எதிர்​மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஐசக் மோகன்​லால், காட்​சன் சுவாமி​நாதன் ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களின் முதல்​வர்​களாகப் பதவி உயர்வு தொடர்​பாக ஆட்​சேபங்களை தெரிவிக்க 2 மாதம் அவகாசம் உள்ள நிலை​யில், அரசு அவசர கதி​யில் 2 நாட்​களில் முதல்​வ​ராக நியமித்து பதவி உயர்வு வழங்​கி​யிருப்​பது சட்​ட​விரோத​மானது.

எனவே, 14 மருத்​துவ கல்​லூரி முதல்​வர்​களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்​தர​வில் எந்த தவறும் இல்லை என்​ப​தால் இந்த மேல்​முறையீட்டு மனுக்​களை தள்​ளு​படி செய்கிறோம். அதே​நேரம், தனி நீதிப​தி​யி்ன் உத்​தர​வுப்​படி 4 வார காலத்​தில் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களின் முதல்​வர் பதவிக்​கான பதவி உயர்வு பட்​டியலை முறை​யாக தயாரித்​து, தகு​தி​யானவர்களை முதல்​வர்​களாக நியமிக்​க வேண்​டும்​, என அரசுக்​கு உத்​தர​விட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x