Published : 05 Jul 2025 12:47 AM
Last Updated : 05 Jul 2025 12:47 AM

இரட்டை இலை விவகாரத்தில் காலநிர்ணயம் செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

சென்னை: அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும் காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் தேர்​தல் ஆணை​யம் உயர் நீதி​மன்​றத்​தில் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமியை தேர்ந்​தெடுத்​தது உள்​ளிட்ட அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்தும் இந்த உட்​கட்சி பிரச்​சினை தொடர்​பான உரிமை​யியல் வழக்​கு​கள் முடிவுக்கு வரும் வரை அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னத்தை ஒதுக்​கக் கூடாது என்​றும் அதி​முக​வுக்கு எதி​ராக தேர்​தல் ஆணை​யத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம், வா. புகழேந்​தி, திண்​டுக்​கல் சூர்​யமூர்த்​தி, ராம்​கு​மார் ஆதித்​தன், ராமச்​சந்​திரன், கே.சி,நரேன் பழனி​சாமி உள்​ளிட்டபலர் மனு அளித்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் மீதான தேர்​தல்ஆணை​யத்​தின் விசா​ரணைக்கு தடை விதிக்​கக்​கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், தேர்​தல் சின்​னங்​கள் ஒதுக்​கீட்டு உத்​தர​வுப்​படி அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக விசா​ரணை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதி​கார வரம்பு உள்​ளதா என்​பது குறித்து முதல்​கட்ட விசா​ரணை நடத்தி முடிவு செய்ய உத்​தர​விட்​டிருந்​தது.

ஆனால் உயர் நீதி​மன்​றம் இந்த உத்​தரவை பிறப்​பித்து 7 வாரங்​கள் கடந்த பின்​பும் அதி​கார வரம்பு குறித்து தேர்​தல் ஆணை​யம் இன்​னும் எந்த முடிவை​யும் எடுக்​க​வில்​லை. இதையடுத்து தேர்​தல் ஆணை​யத்​தின் விசா​ரணைக்கு கால​வரம்பை நிர்​ண​யம் செய்ய வேண்​டும் எனக்​கோரி பழனி​சாமி தரப்​பில் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில், 2026-ம் ஆண்டு நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தயா​ராக வேண்​டிய நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் அதி​முக மற்​றும் இரட்டை இலை விவ​காரம் தொடர்​பான விசா​ரணையை கால​தாமதம் செய்து வரு​வது ஏற்​புடையதல்ல. இது தேவையற்ற பரப்​புரைகளுக்கு வழி​வகுத்​து​ விடும் என்​ப​தால் தேர்​தல் ஆணை​யத்​தின் விசா​ரணைக்கு காலநிர்​ண​யம் செய்ய வேண்​டும் எனக் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஆர்​. சுப்​பிரமணி​யன், கே.சுரேந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிரஞ்​சன் ராஜகோ​பாலன், அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும், காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் கோரி​னார். அப்​போது ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் பி.​ராஜலட்​சுமி மற்​றும் வா. பு​கழேந்தி தரப்​பில் இந்த வழக்​கின் ஆவண நகல்​கள் தங்​களுக்கு வழங்​கப்​பட​வில்லை என புகார் தெரி​வித்​தனர். அதையடுத்து வழக்​கின் எதிர்​மனு​தா​ரர்​களுக்கு வழக்கு தொடர்​பான நகல்​களை வழங்க பழனி​சாமி தரப்​புக்கு உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை நீதிப​தி​கள்​ ஜூலை 10-க்​கு தள்​ளிவைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x