Published : 04 Jul 2025 01:55 AM
Last Updated : 04 Jul 2025 01:55 AM

கோயில் காவலாளி மரண விவகாரம்: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார், போலீ​ஸா​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மனித உரிமை ஆணைய புலன் விசா​ரணைப் பிரிவு ஐஜி-க்​கு, தமிழ்​நாடு மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயில் காவல​ராகப் பணி​யாற்​றிய​வர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிய​தாக மதுரை திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த நிகிதா என்​பவர் புகார் அளித்​திருந்​தார். இதுதொடர்​பாக விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அஜித்​கு​மார், போலீஸார் தாக்​கிய​தில் மரணமடைந்​தார்.

பெரும் பரபரப்பை ஏற்​படுத்​திய இந்​தச் சம்​பவம் தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில், தமிழ்​நாடு மாநில மனித உரிமை​கள் ஆணை​யம், தாமாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்​துள்​ளது.

6 வாரங்களுக்குள் அறிக்கை: இந்​தச் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்​தி, 6 வாரங்​களுக்​குள் அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி, ஆணைய புலன் விசா​ரணைப் பிரிவு ஐஜி-க்​கு, மனித உரிமை​கள் ஆணைய உறுப்​பினர் கண்​ண​தாசன் உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x