Published : 04 Jul 2025 01:53 AM
Last Updated : 04 Jul 2025 01:53 AM

செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: மின்​வாரி​யத்​துக்கு டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான புகார் மீது வழக்​குப்​ப​திவு செய்ய அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக ஒரு வாரத்​தில் முடிவு எடுக்​கப்​படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது.

கடந்த 2021- 23 கால​கட்​டத்​தில் தமிழக மின்​வாரி​யத்​துக்கு 45,800 டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்​சத்​துக்கு டெண்​டர் கோரப்​பட்​டது. இந்த டெண்​டர் மூலம் ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு லாபம் கிடைக்​கச் செய்​து, அதன்​மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸாரிடம் புகார் அளித்தும் சம்​பந்​தப்​பட்ட துறை​யின் அமைச்​ச​ராக பதவி வகித்த செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை எனக்​கூறி அறப்​போர் இயக்​கம் சார்​பில் சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

சிறப்பு புலனாய்வு குழு தேவை:அதில், இந்த முறை​கேட்​டில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டான்​ஜெட்கோ தலை​வர் ராஜேஷ் லக்​கானி உள்​ளிட்​டோருக்கு எதி​ராக சந்​தேகப்​படும்​படியான ஆதா​ரங்​கள் உள்​ள​தால் உயர்நீதி​மன்ற கண்​காணிப்​பில் சிறப்பு புல​னாய்​வுக்​குழு அமைத்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும், எனக் கோரப்​பட்​டிருந்​தது. இந்த மனு, நீதிபதி பி. வேல்​முரு​கன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் ஆஜராகி, மனு​தா​ரர் அளித்​துள்ள புகார் மீது சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்ய அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக இன்​னும் ஒரு வாரத்​தில் முடிவு செய்​யப்​படும் என்றார்.

அறப்​போர் இயக்​கம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சுரேஷ், இந்த முறை​கேடு குறித்து புகார் அளித்து 2 ஆண்​டு​களாகி விட்​டன. அனைத்து ஆவணங்​களும் தகவல் உரிமைச் சட்​டத்​தின் கீழ் பெறப்​பட்​டுள்​ளன. இந்த மனு​வில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் தொடர்​பான வாதங்​களை விரி​வாக முன்​வைக்க வழக்கு விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி வைக்க வேண்​டும், என்​றார். அதையடுத்து நீதிப​தி, வி​சா​ரணை​யை தள்​ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x