Published : 04 Jul 2025 01:46 AM
Last Updated : 04 Jul 2025 01:46 AM

அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? - பாஜக, பாமக கேள்வி

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்​ட அதிகாரி யார்? என அரசி​யல் தலை​வர்​கள் கேள்​வியெழுப்​பி​யுள்​ளனர்.

சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயி​லில் காவல​ாளியாகப் பணி​யாற்​றிய அஜித்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இதில், அவரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்ட அதி​காரி யார்? என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்கை வரு​மாறு:

நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​கு​மார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்​கெனவே 2011-ம் ஆண்டு அன்​றைய துணை முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுடைய நேரடி உதவி​யாளர் மூலம் அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலு​வை​யில் உள்ள நிலை​யில், அவருக்​கும் திமுக.​வின் உயர் மட்​டத் தலை​மைக்​கும் தொடர்​பு​கள் இருந்​த​தால்​தான் தனிப்​படை அமைத்து அஜித்​கு​மாரை அடித்​தும், துன்​புறுத்​தி​யும் விசா​ரிக்க உடனடி ஆணை பிறப்​பிக்​கப்​பட்​ட​தா?

அஜித்​கு​மாரை காவலர்​கள் துன்​புறுத்​து​வதை படம் பிடித்த முக்​கிய சாட்​சி​யான சக்​தீஸ்​வரன், தன் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தாக காவல்​துறை இயக்​குநருக்​குக் கடிதம் எழு​தி​யுள்​ளார். யார் இவரை அச்​சுறுத்​துகிறார்​கள்? எப்ஃஐஆர் பதிவு செய்​யாமலேயே தனிப்​படை அமைத்து அஜித்​கு​மாரை விசா​ரிக்​கு​மாறு மாவட்ட காவல் கண்​காணிப்​பாள​ருக்கு அழுத்​தம் கொடுத்த அதி​காரியைப் பற்​றிய தகவல்​களை அரசு இன்​னும் வெளி​யி​டாதது ஏன்?

அன்​புமணி: திருப்​புவனத்​தில் காவலர்​களால் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மார் என்ற இளைஞரை சித்​ர​வதை செய்​யும்​படி, மாவட்ட காவல்​துறை கண்​காணிப்​பாள​ருக்​குக் கூட தகவல் தெரிவிக்​காமல் காவல்​துறை துணை கண்​காணிப்​பாளரைத் தொடர்​பு​கொண்டு காவல்​துறை உயர் அதி​காரி ஒரு​வர் ஆணை​யிட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. அந்த அதி​காரி யார்? என தமிழக அரசு விளக்​கமளிக்க வேண்​டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்டு விட்​டாலும், தமிழகக் காவல்​துறையை சீர்​திருத்த, இத்​தகைய அதி​காரி​களை அடை​யாளம் கண்​டு, அவர்​கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்​.இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x