Published : 04 Jul 2025 12:27 AM
Last Updated : 04 Jul 2025 12:27 AM

நீலகிரி, கோவையில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக,தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​ கூடும். வரும் 6-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை​யும், 7 முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது.

இன்​றும், நாளை​யும் நீல​கிரி மற்​றும் கோவை மாவட்​டங்​களின் மலைப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x