Published : 03 Jul 2025 06:36 AM
Last Updated : 03 Jul 2025 06:36 AM

சீமானுக்கு எதிராக டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

மதுரை: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ராக டிஐஜி வருண்​கு​மார் தொடர்ந்​துள்ள அவதூறு வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார். இவர் திருச்சி மாவட்ட எஸ்​பி​யாக இருந்​த​போது, இவர் குறித்து சமூக வலை தளங்​களில் நாம் தமிழர் கட்​சி​யினர் அவதூறு கருத்​துகளை பதி​விட்​டனர்.

இதையடுத்து சீமானுக்கு எதி​ராக திருச்சி 4-வது நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் டிஜஜி வருண்​கு​மார் அவதூறு வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்​கின் விசா​ரணைக்கு தடை விதிக்​கக்​கோரி சீமான் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

அதில், சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பேட்​டியளிக்​கும்​போது, வருண்​கு​மாரின் செயல்​பாடு​கள் குறித்து கருத்து தெரி​வித்​
தேன். இதற்​காக எனக்கு எதி​ராக திருச்சி நீதி​மன்​றத்​தில் டிஜஜி வருண்​கு​மார் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்​துள்​ளார். இந்த வழக்கை விசா​ரணைக்கு ஏற்​கக்​கூ​டாது என நீதித்​துறை நடு​வரை கேட்​டுக்​கொண்​டேன்.

எனது கோரிக்கை நிராகரிக்​கப்​பட்​டது. ஒரு காவல் அதி​காரி போல் செயல்​ப​டா​மல், அரசி​யல்​வாதி போல் செயல்​பட்டு பொது வெளி​யிலும், சமூக வலை​தளங்​களி​லும் நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு கருத்​துகளை தெரி​வித்​துள்​ளார். காவல்​துறை​யில் பணிபுரிபவர்​கள் அரசி​யல் தலை​வர்​களின் தனிப்​பட்ட கருத்​து களில் தலை​யிட​வோ, குறுக்​கிடவோ உரிமை​யில்​லை.

மனு​வில் வருண்​கு​மார் கூறியபடி அவர் மீது நான் எந்த அவதூறு கருத்​துகளை​யும் தெரிவிக்​க​வில்​லை. இதனால் திருச்சி நீதி​மன்​றத்​தி்ல் எனக்கு எதி​ராக டிஐஜி வருண்​கு​மார் தாக்​கல் செய்​துள்ள அவதூறு வழக்கு விசா​ரணைக்கு தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிபதி எல்​. விக்​டோரியா கவுரி விசா​ரித்​தார். பின்​னர் நீதிப​தி, திருச்சி நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருக்​கும் சீமானுக்கு எதி​ரான அவதூறு வழக்​கின் விசா​ரணைக்கு இடைக்​கால தடை விதித்​தும், டிஜஜி வருண்​கு​மார் பதில் மனு தாக்​கல் செய்​ய​வும் உத்​தர​விட்டு விசா​ரணையை ஆக.4-ம் தேதிக்கு தள்​ளிவைத்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x