Published : 03 Jul 2025 05:30 AM
Last Updated : 03 Jul 2025 05:30 AM

காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

சிவகங்கை: ‘​போலீஸ் விசா​ரணை​யில் அஜித்​கு​மார் கொலை​யான சம்​பவம் அரச பயங்​கர​வாதம்’ என விடு​தலை சிறுத்தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் ஆறு​தல் கூறி​னார். தொடர்ந்து அஜித்​கு​மாரின் புகைப்​படத்​துக்கு மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்து கொலை செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது. 5 காவலர்​களைக் கைது செய்​தது ஆறு​தல் அளிக்​கிறது என்​றாலும், இச்​சம்​பவம் ஆறாத் துயரம். காவல்​துறை விசா​ரணை​யில் படு​கொலை செய்​யப்​படு​வது தொடர்​கதை​யாக நீடிக்​கிறது. தமிழகம் மட்​டுமல்ல; இந்​தியா முழு​வதும் இந்த நிலை​தான் உள்​ளது. முதல்​வர் தலை​யிட்டு நடவடிக்கை எடுத்​தது ஆறு​தலைத் தரு​கிறது.

சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்​டது அவரின் நேர்​மையை உறு​திப்​படுத்​துகிறது. முதல் தகவல் அறிக்கை பதி​யாத ஒரு வழக்​கில் போலீ​ஸார் விசா​ரணையே செய்​யக் கூடாது என்​பது​தான் சட்​டம். இந்த விசா​ரணையை நடத்​தி​யது அத்​து​மீறல். காவல் துறை​யினர் சட்​டப்​பூர்​வ​மாக அங்​கீகரிக்​கப்​பட்ட ரவுடிகள்​போல் செயல்​படு​கின்​றனர் என்று உச்ச நீதி​மன்​றமே விமர்​சித்​துள்​ளது. அந்த அளவுக்கு போலீ​ஸாரின் அதி​கார, ஆணவம் அவ்​வப்​போது வெளிப்​பட்டு வரு​கிறது. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதில் குற்றம் சொல்ல முடியாது.

ரூ.1 கோடி இழப்பீடு தரவேண்டும் விசா​ரணையை எவ்​வாறு நடத்த வேண்​டும் என்ற உச்ச நீதி​மன்​றத்​தின் 11 கட்​டளை​களை போலீ​ஸார் பின்​பற்​று​வ​தில்​லை. அஜித்​கு​மார் கொலையை போலீஸ் ‘எக்​ஸஸ்’ என்ற சொல்​லுக்​குள்ளே சுருக்​கி​விட முடி​யாது. இது ஒரு ‘ஸ்​டேட் டெரரிஸம்’.

இந்த அரச பயங்​கர​வாதத்தை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்​பீடு வழங்க வேண்​டும். கைதானவர்​களை ஜாமீனில் வெளியே விடா​மல், இந்த வழக்கை விரைந்து விசா​ரிக்க வேண்​டும். குற்​றம் செய்​தோர் யா​ராக இருந்​தா​லும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்​.இவ்​வாறு திருமாவளவன் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x