Published : 03 Jul 2025 05:36 AM
Last Updated : 03 Jul 2025 05:36 AM

வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பூர் மாவட்​டம், அவி​னாசி கைகாட்​டிப்​புதூர் பகு​தியை சேர்ந்த அண்​ணாதுரை​யின் மகளுக்​கும், கவின்​கு​மார் என்​பவருக்​கும் 3 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடந்த நிலை​யில், அப்​போது கொடுக்​கப்​பட்ட 300 பவுன் வரதட்​சணை போதாது, 500 பவுன் வேண்​டும் என கணவர் கவின்​கு​மாரின் குடும்​பத்​தார் மனப்​பெண்ணை பேராசைக்​காக துன்​புறுத்​தி​யுள்​ளனர்.

அதே​போல் திரு​வள்​ளூர் மாவட்ட பொன்​னேரி அருகே திரு​மண​மான 4-வது நாளிலே புது​மணப்​பெண் தூக்​கிட்டு தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ளார். வரதட்​சணை தரவில்லை என்​ப​தற்​காக 2 பெண்​கள் கொடுமை செய்​யப்​பட்டு உயி​ரிழந்த சம்​பவங்​கள் மனதுக்கு வேதனையளிக்​கிறது. அந்த பெண்​களை இழந்​து​வாடும் பெற்​றோர்​களின் மனநிலையை யோசிக்க வேண்​டும்.

பெண்​ணும், பொன்​னும் ஒன்​று​தான் என்று நினைப்​பவர்​கள் மத்​தி​யில், பொன் என்​னும் உலோகத்​துக்கு ஆசைப்​பட்டு திரு​மண​மாகி நம்​முடன் வாழ​வந்த பெண்​ணின் எதிர்​காலத்தை கேள்விக்​குறி​யாக்​கு​வது எந்த வகை​யில் நியா​யம்? நாம் 20-ம் நூற்​றாண்​டில் இருக்​கிறோம் என்​றாலும் இன்​னும் பெண்​களுக்கு எதி​ராக நடக்​கும் அநீ​தி​கள் குறைய​வில்லை என்​ப​தற்கு இந்த இரண்டு மரணங்​களும் சான்​று.

வரதட்​சணை கொடுமை செய்​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​களுக்கு உச்ச பட்ச தண்​டனை​யான ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும். இனி இது​போன்ற வரதட்​சணை கொடுமை செய்து மரணங்​கள் எங்​கும் நடக்​காத வண்​ணம் இந்த அரசு பாது​காக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x