Published : 03 Jul 2025 05:30 AM
Last Updated : 03 Jul 2025 05:30 AM

திருப்புவனம் இளைஞர் கொலையில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி யார்? - விளக்கம் கேட்கும் அன்புமணி

சென்னை: ​திருப்​புவனம் இளைஞர் கொலை​யில் தொடர்​புடைய ஐஏஎஸ் அதி​காரி யார் என்​பதை தமிழக அரசு விளக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக காவல்​துறையை, அதி​காரம் படைத்த சிலருக்​கான அடி​யாள் படை​யாக செயல்பட வைத்​து, அப்​பாவி இளைஞர் ஒரு​வரின் கொலைக்கு காரண​மாக திமுக அரசு இருந்​துள்​ளது.

திமுக எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் அஜித்​கு​மாரின் வீட்​டிலேயே முகாமிட்டு யாரை​யும் சுதந்​திர​மாக பேச முடி​யாத​வாறு தடுத்​துள்​ளனர். பாமக​வின் பொருளாள​ரும் பல வகை​களில் தடுக்​கப்​பட்​டிருக்​கிறார்.

அப்​பாவி இளைஞரை அடித்து விசா​ரணை நடத்த தூண்​டிய ஐஏஎஸ் அதி​காரி யார் என்​பதை தமிழக அரசு விளக்க வேண்​டும். இதில் தொடர்​புடைய காவல் துறை உயர​தி​காரி​கள் அனை​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​படு​வதுடன், கைதும் செய்​யப்பட வேண்டும்.

கொலை செய்​யப்​பட்ட இளைஞர் குடும்​பத்​துக்கு அரசால் வழங்​கப்​பட்ட உதவி​கள் தவிர ரூ.50 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்பட வேண்டும். மனிதநே​யத்​துடன் பழகு​வது குறித்து காவல்​துறைக்கு பயிற்சி வகுப்பு நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x