Published : 03 Jul 2025 05:24 AM
Last Updated : 03 Jul 2025 05:24 AM

மதுரை ஆதீனத்துக்கு 2-வது முறையாக சம்மன்

சென்னை: கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் ஞானசம்​பந்த தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகளின் காரும், சேலத்​தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும் உளுந்​தூர்​பேட்டை பகு​தி​யில் மோதி விபத்​துக்​குள்​ளாகின. 2 கார்​களும் லேசாக சேத மடைந்​தன.

மறு​நாள் காட்​டாங்​கொளத்​தூரில் ஒரு நிகழ்ச்​சி​யில் பேசிய ஆதீனம், மாற்று மதத்தை சேர்ந்த சிலர் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்​ற​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு காவல் துறை மறுப்பு தெரி​வித்​தது.

இந்த நிலை​யில், உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரின்​பேரில், இரு சமூகத்​தினர் இடையே பகைமையை ஏற்​படுத்​துதல் உட்பட 4 பிரிவு​களின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

இதுதொடர்​பாக நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு ஆதீனத்​துக்கு சைபர் க்ரைம் போலீ​ஸார் கடந்த 30-ம் தேதி சம்​மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராக​வில்​லை.

இந்​நிலை​யில், சென்னை சேத்​துப்​பட்டு காவல் நிலைய வளாகத்​தில் உள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி ஆஜராகு​மாறு மதுரை ஆதீனத்​துக்கு 2-வது முறை​யாக போலீ​ஸார்​ சம்​மன்​ அனுப்​பி உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x