Published : 03 Jul 2025 05:02 AM
Last Updated : 03 Jul 2025 05:02 AM

மடப்புரத்தில் கோயில் காவலாளியின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்

மடப்புரத்தில் அஜித்குமாரின் இல்லத்துக்கு சென்ற விஜய், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மதுரை: போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை தவெக தலைவர் விஜய் சந்​தித்து ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்து ஆறு​தல் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்த பத்​திர​காளி கோயில் ஒப்​பந்த காவலாளி அஜித்​கு​மார் (29), இவரை தங்​கநகை திருட்டு தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யில் தாக்​கிய​தில் ஜூன் 29-ம் தேதி உயி​ரிழந்​தார்.

இச்​சம்​பவம் தமிழகம் முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. காவல்​நிலைய மரண சம்​பவத்தை கண்​டித்​தும் நீதி கேட்​டும் தவெக சார்​பில் ஜூன் 3-ல் சென்​னை​யில் ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வ​தாக அறி​வித்​தனர். இந்நிலையில், நேற்று தவெக தலை​வர் விஜய் மடப்​புரத்​தில் உள்ள அஜித்​கு​மார் வீட்​டுக்குசென்​றார்.

அங்கு அவரது தாயார் மால​தி, அவரது சகோ​தரரை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். அப்​போது தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உடனிருந்​தார். அப்​போது அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு ரூ.2 லட்​சம் நிதி உதவி அளித்​தார். இரவு 7.50 மணிக்கு வந்​தார். ஆறு​தல் கூறி நிதி​யுதவி அளித்​து​விட்டு இரவு 7.53 மணிக்கு மடப்​புரத்​திலிருந்து புறப்​பட்​டார்.

இதுகுறித்து அஜித்​கு​மாரின் தாயார் கூறுகை​யில், “விஜய் எங்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். அப்​போது, தங்​களது மகனின் இழப்பு பெரிய இழப்​பு. எவ்​வளவு ஆறு​தல் சொன்​னாலும் ஈடு​செய்ய முடி​யாது. தங்​களுக்கு எப்​போதும் தவெக​வும், நானும்​ உடனிருப்​போம்​ என்​றார்​” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x