Published : 02 Jul 2025 06:09 AM
Last Updated : 02 Jul 2025 06:09 AM

அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

திருப்பூர்: அரசி​யல் அழுத்​தங்​கள் இருப்​ப​தால் ரிதன்யா தற்​கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று அவரது குடும்​பத்​தினர் கோரிக்கை வைத்​துள்​ளனர். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​தவர் கவின்​கு​மார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் ரிதன்யா விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார்.

தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்​து, ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் மீது துன்​புறுத்​தல் மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டு​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​து, கவின்​கு​மார், ஈஸ்​வரமூர்த்​தி​யைக் கைது செய்​துள்​ளனர்.

இதுகுறித்து ரிதன்யா குடும்​பத்​தினர் கூறிய​தாவது: திரு​மண​மான 20 நாட்​களில் நள்​ளிர​வில் பிரச்​சினை ஏற்​பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்​தார். அப்​போதே அவர் நிம்ம​தி​யை தொலைத்​து விட்​டார். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்​யும் வரை, போலீ​ஸார் விசாரணை முறை​யாக நடந்​தது.பின்​னர், உடல்​நிலை​யைக் காரணம்​ காட்டி சித்​ரா தே​வியை விடு​வித்​துள்​ளனர்.

மாமியார் சித்ராதேவி

இதை ஏற்க முடி​யாது. ஏனெனில், குடும்​பத்​தில் நடந்த விஷ​யங்​கள் அனைத்​துக்​கும் மூலகாரண​மாக இருந்​தவர்​களுள் ஒரு​வர் மாமி​யார் சித்ராதே​வி. ரிதன்யா சடலத்​தைப்பெறும்​வரை 3 பேர் கைது என்று சொல்​லிவந்த போலீ​ஸார், சடலத்​தைப் பெற்றதும் 2 பேரை மட்​டும் கைது செய்​து​விட்​டு, சித்​ராதே​வியை விடு​வித்​துள்​ளனர். அவரை​யும் கைது செய்ய வேண்​டும்.

அரசி​யல் அழுத்​தங்​களால் இந்த வழக்கை கிடப்​பில் போடு​வதற்​கான முகாந்​திரங்​கள் உள்​ளன. ரிதன்யா உயி​ரிழப்​பில் உரிய நீதியை பெற்​றுத்தர வேண்​டும். போலீ​ஸார் விசாரணை, கோட்​டாட்​சி​யர் விசா​ரணை​யில் நியா​யம் கிடைக்​குமா என்ற சந்​தேகம் எங்​க ளுக்கு இருப்​ப​தால், முதல்​வர் ஸ்டா​லின் இதில் தலை​யிட்​டு, உரிய நீதி பெற்​றுத்தர வேண்​டும் அல்​லது சிபிஐ விசா​ரணைக்கு பரிந்​துரைக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x