Published : 02 Jul 2025 05:29 AM
Last Updated : 02 Jul 2025 05:29 AM

தமிழகத்தில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம்? - மக்கள் அதிர்ச்சி; கடும் நடவடிக்கை எடுக்க செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

சிவகங்கை: சாத்​தான்​குளம் சம்​பவம்​போல மடப்​புரத்​தில் மற்​றொரு சம்​பவம் நடை​பெற்​ற​தால் தமிழக மக்​கள் அதிர்ச்​சி​யில் உள்ளனர். தூத்​துக்​குடி மாவட்​டம் சாத் தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராஜ். அவரது மகன் பென்​னிக்​ஸ். செல்​போன் கடை நடத்தி வந்த இரு​வரை​யும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி சிறிய வாக்​கு​வாத பிரச்​சினைக்​காக போலீ​ஸார் காவல்​நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர்.

இரு​வரை​யும் காவல் நிலை​யத்​திலேயே போலீ​ஸார் கொடூர​மாகத் தாக்​கினர். சிறை​யில் அடைக்​கப்​பட்ட 2 பேரும் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தமிழகத்தை அதிர்ச்​சி​யடையச் செய்​தது. தற்​போதைய முதல்​வரும், அப்​போதைய எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின், கனி​மொழி மற்​றும் சமூக செயல்​பாட்​டாளர்​கள், திரைப்பட பிரபலங்​கள், கிரிக்​கெட் வீரர்​கள் என பலதரப்​பிலும் கடும்கண்டன குரல்​கள் எழுந்​தன. இதனால் அதி​முக அரசுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது.

அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட
காவலர்கள் ஆனந்த், கண்ணன், சங்கர மணிகண்டன். ராஜா, பிரபு.

காவல் துறை​யினர் பலர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்​கு​மாறு 2021 மார்ச் மாதம் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஆனால், இன்​னும் வழக்கு விசா​ரணை முடிய​வில்லை. அதேநேரம் இருவரின் குடும் பத்துக்கும் தலா ரூ.10 லட்சம் மற்றும் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்​போது அதே​போன்ற சம்​பவம் திமுக ஆட்​சி​யில் மடப்​புரத்​தில் நடந்​தேறி​யுள்​ளது.

போலீ​ஸார், கோயில் காவலா​ளியை கொடூர​மாகத் தாக்​கிய​தில் உயி​ரிழந்​துள்​ளார். இதற்கு அதி​முக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்​சி, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. ஆட்சி மாறி​னாலும், போலீஸ் விசா​ரணை உயி​ரிழப்​பு​களும், காவல் நிலைய உயி​ரிழப்​பு​களும் தொடர்ந்து கொண்​டு​தான் இருக்​கின்​றன. சாத்​தான்​குளத்​தில் 2 பேர் உயி​ரிழந்​த​போது அங்கு சென்ற ஸ்டா​லின், கனி​மொழி, ஏன் மடப்​புரம் காவலாளி உயி​ரிழந்​த​போது வரவில்லை என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

காவலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்புவனம்
காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில்
ஈடுபட்ட காவலர்களின் குடும்பத்தினர்.

சாத்​தான்​குளம் வழக்​கை​போல் தாமதப்​படுத்​தாமல், மடப்​புரம் அஜித்​கு​மார் உயி​ரிழப்பு வழக்​கில் விரைந்து நீதி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனவும் கோரிக்கை எழுந்​துள்​ளது. தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 போலீஸ் விசா​ரணை மற்​றும் காவல் நிலைய மரணங்​கள் ஏற்​பட்​டுள்​ள​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்சாட்டி வரு​கின்​றன.

உள்​துறையை தனது கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்​கும் முதல்​வர், இது​போன்ற மரணங்​கள் ஏற்​ப​டாத வகை​யில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சமூக செயல்​பாட்​டாளர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். இதனிடையே, தனிப்படை போலீஸார் கோயில் மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியதை, கோயில் ஊழியர் அருகேயுள்ள கழிப்பறையில் பதுங்கியிருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாகவும், திருப்பு முனையாகவும் மாறியுள்ளது.

மடப்புரம் கோயில் பின்புறமுள்ள மாட்டு
தொழுவத்தில் அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீஸார்.

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆஷிஷ் ராவத், சண்முகசுந்தரம்

இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை தொடர்ந்து, தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தர விட்டார். மேலும், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x