Published : 02 Jul 2025 05:11 AM
Last Updated : 02 Jul 2025 05:11 AM

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு

சென்னை: அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான திருமண முன்​பணம் ரூ.5 லட்​ச​மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், அவர்​களின் பிள்​ளை​களுக்​கான திருமண முன்​பணம் அரசால் வழங்​கப்​படு​கிறது. முன்​ன​தாக கடந்த 1989-ம் ஆண்​டு, அரசு ஊழியர் அல்​லது அவரது மகன் திரு​மணத்​துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்​லது மகள் திரு​மணத்​துக்கு ரூ.5 ஆயிரம் முன்​பண​மாக வழங்​கப்​பட்​டது. அதன்​பின், 1995-ல் இத்​தொகை ரூ.6 ஆயிரம் மற்​றும் 10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் கடந்த பட்​ஜெட் கூட்​டத்​ தொடரில் 110 விதி​யின்​கீழ் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ‘‘அரசுப் பணியாளர்கள் மற்​றும் ஆசிரியர்​கள் தமது பணிக்​காலத்​தில் தேவை​யின் அடிப்​படை​யில் திருமண முன்​பண​மாக இது​வரை பெண் ஊழியர்​களுக்கு ரூ.10 ஆயிரம் மற்​றும் ஆண்​களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்​கப்​படு​கிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலு​கள், ஆசிரியர்​கள் அனை​வருக்​ககும் பொது​வாக ரூ.5 லட்​ச​மாக உயர்த்தி வழங்​கப்​படும்’’ என அறி​வித்​தார்.

இதன்​படி, திருமண முன்​பணத்தை ரூ.5 லட்​ச​மாக உயர்த்தி நிதித்​துறை செயலர் உதயச்​சந்​திரன் அரசாணை வெளி​யிட்​டுள்​ளார். மேலும், இதற்​கான வழி​காட்​டு​தலும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி முன்​பண​மானது, அரசு ஊழியரின் 15 மாத அடிப்​படைச் சம்​பளம் அல்​லது ரூ.5 லட்​சம் இதில், எது குறைவோ அது வழங்​கப்​படும். ஓய்​வுபெற 5 ஆண்​டு​கள் வரை இருக்​கும் ஊழியர்​கள் முன்​பணம் பெறலாம்.

கணவன், மனைவி, பெற்​றோர் அரசு ஊழியர்களாக இருப்​பின், ஒரு குடும்​பத்தில்​ ஒரு முறை மட்​டுமே முன்​பணம்​ பெற முடி​யும்​ என்​பது உள்ளிட்​ட வழி​காட்​டு​தல்​​ வழங்​கப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x