Published : 01 Jul 2025 07:40 AM
Last Updated : 01 Jul 2025 07:40 AM

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு - முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: `ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை நிகழ்வை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கிறார். தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெறுகிறது. அடுத்த தேர்​தலிலும் வெற்றி பெற்று ஆட்​சியை தக்க வைக்​கும் வகை​யில் திமுக பல்​வேறு முன்​னெடுப்​பு​களை செய்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற பெயரில், வாக்​குச்​சாவடிதோறும் 30 சதவீதம் வாக்​காளர்​களை திமுக உறுப்​பினர்​களாக்​கும் திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் மதுரை​யில் நடை​பெற்ற திமுக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அறி​வித்​தார்.

இதையடுத்​து, இந்த உறுப்​பினர் சேர்க்கை திட்​டத்தை இன்று (ஜூலை 1) முதல்​வர் ஸ்டா​லின், சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். முன்​ன​தாக, இதற்​காக, திமுக தகவல் தொழில்​நுட்ப அணி சார்​பில் தொகு​திக்கு ஒரு​வர் என 234 பேருக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்​ளதுடன், உறுப்​பினர் பதிவுக்​கென தனி செயலி​யும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

பயிற்சி பெற்ற 234 பேரும் தொகு​தி​ வாரி​யாக 68 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகளில் பூத் டிஜிட்​டல் முகவர்​களுக்கு பயிற்சி அளித்​துள்​ளனர். இது தொடர்பாக இன்​று, முதல்​வர் ஸ்டா​லின் அண்ணா அறி​வால​யத்​தில் செய்​தி​யாளர்​களை சந்​தித்து அறி​விப்பு வெளி​யிடு​கிறார். தொடர்ந்​து, நாளை ஜூலை 2-ம் தேதி முதல் திமுக​வின் நிர்​வாக ரீதி​யான 76 மாவட்​டங்​களி​லும் ஓரணி​யில் தமிழ்​நாடு பொதுக்​கூட்​டங்​கள் நடத்​தப்​படு​கிறது.

மறு​நாள் ஜூலை 3-ம் தேதி தமிழகம் முழு​வதும் அனைத்து வாக்​குச்​சாவடி பகு​தி​களி​லும் வீடு வீடாக சென்று மக்​களை சந்​தித்து பரப்​புரை செய்ய அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. நிறை​வாக ஆக.15-ம் தேதிக்​குப்​பின் நிறைவு விழா நடத்​தப்பட வேண்​டும் என்று அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது. இதில், வீடு வீடாக செல்​லும் போது எதிர்க்​கட்​சி​யினர் இல்​லங்​களுக்​கும் நேரில் சென்று பேச வேண்​டும் என்றும்​ முதல்​வர்​ அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x