Published : 30 Jun 2025 06:22 AM
Last Updated : 30 Jun 2025 06:22 AM

கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை: கோ​யில்​களில் 5 ஆண்​டு​களுக்கு மேல் பணி​புரி​யும் தினக்​கூலி பணி​யாளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் செயற்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு திருக்​கோ​யில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின் மாநில செயற்​குழு கூட்​டம் சென்னை கோயம்​பேட்​டில் உள்ள குறுங்​காலீஸ்​வரர் கோயில் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாநில காப்​பாளர் வி.கண்​ணன் தலைமை தாங்​கி​னார். மாநில துணைத் தலை​வர் எஸ்​.தன​சேகர், மாநில இணை செய​லா​ளர் தாம்​பரம் இரா.ரமேஷ் உள்பட தமிழகம் முழு​வதும் இருந்து பல கோயில்​களில் பணி​யாற்​றும் நிர்​வாகி​கள் மற்​றும் பொறுப்​பாளர்​கள், மகளிர் அணி​யினர் கலந்து கொண்​டனர்.

வீட்டு வாடகைப்​படி: கூட்​டத்​தில், விலை​வாசி உயர்​வுக்கு ஏற்ப அரசு ஊழியர்​களுக்கு வழங்​கு​வது போல் ஹெச்​.ஆர்​.ஏ. வீட்டு வாடகைப்​படி மற்​றும் சி.சி.ஏ நகர ஈட்​டு​படி உயர்த்தி வழங்க வேண்​டும். கோயில்​களில் 5 ஆண்​டு​களுக்கு மேல் தினக்​கூலி அடிப்​படை​யில் பணிப்​புரி​யும் தொகுப்​பூ​திய பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும்.

இந்து சமய அறநிலை​யத்​துறை பணி​யாளர்​களுக்கு சம்​பளம் வழங்​கு​வது போல் கோயில் பணி​யாளர்​களுக்​கும் மையநிதி ஏற்​படுத்தி சம்​பளம் மற்​றும் இதர சலுகைகள் வழங்க வேண்​டும். கோயில் கணக்​கு​களை தணிக்கை செய்​வதற்கு “பசலி” முடிந்த பிறகு 2 மாத காலம் அவகாசம் தரவேண்​டும்.

பணி​யாளர்​களை முழு நேர அரசு ஊழிய​ராக்க வேண்​டும் உள்​ளிட்ட 13 அம்ச கோரிக்​கைகளை தீர்​மான​மாக நிறை வேற்​றப்​பட்​டது. மேலும் இந்த தீர்​மானங்​களை முன்​வைத்து அறநிலைத்​துறை​யின் கவனத்தை ஈர்க்​கும் வகை​யில் விரை​வில் மாபெரும் மா​நாடு அல்​லது போ​ராட்​டம் நடத்​து​வது குறித்து செயற்​குழு கூட்​டத்​தில்​ முடிவு செய்​யப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x