Last Updated : 30 Jun, 2025 10:13 AM

 

Published : 30 Jun 2025 10:13 AM
Last Updated : 30 Jun 2025 10:13 AM

மதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா பாஜக? - நாராயணன் திருப்பதி நேர்காணல்

நாராயணன் திருப்பது | படம் உதவி: எஸ்​.முகம்​மது யூசுப்​

மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு பெரும் வெற்றிபெற்றதாக இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்ற மாநாடுகள் இனி நடத்தப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், தமிழக பாஜக துணை தலைவரும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆர்ஈசி லிமிட்டெட்டின் (ஊரக மின்வசதியாக்கக் கழகம்) இயக்குநருமான நாராயணன் திருப்பதி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக பேட்டி இது.

​பாஜக மற்​றும் இந்து அமைப்​பு​கள் எதிர்​பார்த்த அளவுக்கு மதுரை முருக பக்​தர்​கள் மாநாடு வெற்​றி​பெற்​ற​தா?

இறைப் பணி​யில் வெற்றி தோல்வி என்​பதே இல்​லை. மக்​கள் எழுச்​சி​யை​யும் ஒற்​றுமை​யை​யும் காண முடிந்​தது.

இந்​துக்​களின் ஆன்​மிக உணர்​வு​களை ஒரு​முகப்​படுத்த ஏற்​பாடு செய்​யப்​பட்ட இந்த மாநாட்​டால் பாஜக-வுக்கு ஆதா​யம் கிடைக்​கு​மா?

ஆதா​யத்​துக்​காக நடத்​தப்​பட்ட மாநாடு அல்ல. சிறு​பான்மை மக்​களின் ஆதரவை பெற, பெரும்​பான்​மை​யினரின் நம்​பிக்​கை​களை சிதைக்​கும் சில அரசி​யல் கட்​சிகளுக்கு இந்து ஒற்​றுமை என்​றால் என்ன என்​பதை இந்த மாநாடு காட்டி இருக்​கிறது. அது ஆதா​யம் என்​றால் அப்​படியே ஆகட்​டும்.

மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மானங்​களுக்​கும் தங்​களுக்​கும் சம்​பந்​தமில்லை என பாஜக கூட்​டணி கட்​சி​யான அதி​முக தெரி​வித்​திருக்​கிறதே..?

இது பாஜக-​வின் மாநாடு அல்​ல... இந்து முன்​னணி நடத்​திய மாநாடு.

மாநாட்​டில் வீடியோ வெளி​யிட்டு அண்​ணா, பெரி​யாரை சிறுமைப்​படுத்​தி​விட்​ட​தாக அதி​முக ஆதங்​கப்​பட்​டிரு​கிறதே..?

மறைந்த தமிழக தலை​வர்​கள் யாரை​யும் சிறுமைப்​படுத்​தி​ய​தாக தெரிய​வில்​லை.

தமி​ழ​கத்​தில் முரு​கனை முன்​னிலைப்​படுத்தி அரசி​யல் செய்​யும் பாஜக, அயோத்தி ராமர் கோயி​லில் முரு​க​னுக்கு சன்​னிதி அமைக்​காதது ஏன் என எழும் விமர்​சனங்​கள் குறித்​து..?

கடவுளை முன்​னிறுத்தி அரசி​யல் செய்ய வேண்​டிய அவசி​யம் பாஜக-வுக்கு இல்​லை. முரு​கர் கோயி​லில் ராமருக்கு சன்​னிதி இல்​லை. உருவ வழி​பாட்​டில் நம்​பிக்கை உள்​ளவர்​களுக்கு இது புரி​யும்.

நடிகர் விஜய்யை இயக்​கு​வதே பாஜக தான் என்ற வாதம் குறித்து என்ன சொல்​கிறீர்​கள்?

அப்​படி​யா? எனக் கேட்​டுக் கொள்​கிறேன்.

திமுக-வை வீழ்த்த எந்த எல்​லைக்​கும் போவேன் என்​கி​றார் விஜய். அவரை பாஜக கூட்​ட​ணிக்கு இழுக்க முயற்​சிகள் நடப்​ப​தாக சொல்​வது உண்​மை​யா?

திமுக-வை வீழ்த்த நினைக்​கும் அனை​வ​ரும் ஓரணி​யில் சேர வேண்​டும் என்று தொடர்ந்து சொல்லி வரு​கி​றோம். அதைத் தான் விஜய்​யும் சொல்​கி​றார் என்று நினைக்​கிறேன்.

பெரி​யார், அண்​ணாவை அவம​தித்​தவர்​கள் தமிழக அரசி​யலில் தலை​யெடுத்​த​தில்லை என திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி சொல்லி இருக்​கி​றாரே..?

ஈவெரா வை தேசிய பாது​காப்பு சட்​டத்​தில் சிறை​யிலடைக்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தவர் கருணாநி​தி. அண்​ணா​வின் நம்​பிக்கை நட்​சத்​திரம் எம்​ஜிஆரை அவமானப்​படுத்​தி​யது திமுக. எனவே, பெரி​யார், அண்​ணாவைப் பற்றி பேச திமுக-வுக்கு தகு​தி​யில்​லை.

மதுரை மாநாட்​டில், முரு​க​னுக்கு ஆபத்து எனச் சொல்லி இருக்​கிறதே பாஜக... அதை விளக்​க​மாகச் சொல்ல முடி​யு​மா?

பண்​பாட்டு ரீதி​யாக, ஆன்​மிக ரீதி​யாக தமி​ழர்​களை ஒருங்​கிணைக்​கும் கடவுள் முரு​க​னை, ஓட்​டுக்​காக இழி​வுபடுத்​தும் அரசி​யல் கட்​சிகளால் புனித​மான திருப்​பரங்​குன்​றம் முரு​க​னுக்கு நேர்ந்த அவம​திப்​பை​யும் முருக பக்​தர்​களுக்கு இழைக்​கப்​பட்ட அநீ​தி​யை​யும் தான் அப்​படி குறிப்​பிட்​டிருக்​கி​றோம்.

முருக பக்​தர்​கள் மாநாட்​டில் முஸ்​லிம்​கள் மீது வெறுப்பை தூண்​டும் வித​மாக பேசி இருக்​கி​றாரே ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்யாண்... இதனால், பாஜக-வுக்கு சிறிதளவேனும் இருக்​கும் சிறு​பான்​மை​யினர் வாக்​கு​களுக்கு சேதா​ரம் ஏற்​ப​டா​தா?

இஸ்​லாம் வேறு... இஸ்​லாமிய அடிப்​படை​வாதம் வேறு.

முஸ்​லிம்​களுக்கு தமி​ழ​கத்​தில் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்​பளிக்​குமா பாஜக?

சாதி, மத அடிப்​படை​யில் தேர்​தல்​களை நாம் சந்​திப்​ப​தில்​லை.

இந்​திய தொல்​லியல் ஆய்​வகம் கீழடி அகழாய்வு அறிக்​கை​யில் சந்​தேகம் எழுப்பி இருப்​பது பாஜக-வுக்கு பாதிப்பை உண்​டாக்​கா​தா?

இந்​திய தொல்​லியல் துறை​யால் தான் தமி​ழ​கத்​தின் பல்​வேறு நாகரிக, வரலாற்று பண்​பாட்டு அடை​யாளங்​கள் வெளிப்​பட்​டிருக்​கின்​றன.

மதுரை​யில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனையை எப்​போது​தான் கட்​டி​முடித்​துத் திறப்​பீர்​கள்?

ஜப்​பான் நிதி நிறு​வனத்​தின் உதவி​யுடன் உரு​வாக்​கப்​பட்டு கொண்​டிருக்​கிற மதுரை எய்ம்ஸ் மருத்​து​வ​மனை மிக விரை​வில் பயன்​பாட்​டிற்கு வரும். அதன் கட்​டு​மானத்தை பார்​வை​யிட தமிழக முதல்​வர் தயங்​கு​வது ஏன்?

தமி​ழ​கத்​தில் கள் இறக்க அனு​ம​திக்க வேண்​டும் என்று சீமான் சொல்லி இருக்​கி​றார்​... இதே கருத்தை முன்பு அண்​ணா​மலை​யும் தெரி​வித்​திருந்​தார். உண்​மை​யில் பாஜக இதை ஆதரிக்​கிற​தா?

கடந்த 20 வருடங்​களாக அனைத்​துத் தேர்​தல்​களி​லும் இதை தேர்​தல் வாக்​குறு​தி​யாக அளித்து வரு​கி​றோம்.

பாமக-​வில் நடக்​கும் சண்​டைக்கு காரணம் திமுக என்​கி​றார் அன்​புமணி. பாஜக உடன் கூட்​டணி வேண்​டாம் என்று ராம​தாஸ் சொல்​வ​தால் தான் பிரச்​சினை என்​கி​றார்​கள். இதில் எது உண்​மை?

மற்​றொரு கட்​சி​யின் உள்​விவ​காரங்​களில் பாஜக தலை​யி​டாது; கருத்​தும் சொல்​லாது.

பாமக பஞ்​சா​யத்தை முடிவுக்கு கொண்​டுவர ஆடிட்​டர் குரு​மூர்த்தி மூல​மாக பாஜக முயற்சி எடுத்​தது உண்​மை​தானே..?

பாஜக அவசி​யம் இல்​லாத விவ​காரங்​களில் தலை​யிடு​வ​தில்​லை.

மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக கூட்​ட​ணியை விட்டு வில​கிய தேமு​திக மீண்​டும் உங்​களிடம் வரும் என எதிர்​பார்க்​கிறீர்​களா?

உறு​தி​யாக வந்து விடும் என நம்​பு​கி​றோம்.

திருச்​செந்​தூர் கோயில் குட​முழுக்​கில் தமி​ழிலும் மந்​திரங்​கள் ஓதப்​படும் என அரசு கூறி​யிருப்​ப​தற்கு பாஜக-​வின் ரியாக் ஷன் என்ன?

தாராள​மாக... இதில் என்ன தவறு?

உலகின் மிகப் பழமை​யான மொழி தமிழ் என பிரதமர் மோடி சொல்லி வரு​கை​யில், தமி​ழுக்கு ஒதுக்​கு​வதை விட பல மடங்கு கூடு​தலான நிதியை சம்​ஸ்​கிருதத்​துக்கு ஒதுக்​கு​வது சரி​யா?

இந்​தியா தனது நிர்​வாக வசதிக்​காக மொழி ரீதி​யாக மாநிலங்​களை பிரித்​துக் கொண்​டது. அந்​தந்த மாநிலங்​கள் தங்​கள் மொழியை செவ்​வனே வளர்க்​கும். ஆனால், சம்​ஸ்​கிருதம் எந்த மாநில மக்​களுக்​கும் தாய் மொழியல்ல. அதை வளர்க்க வேண்​டிய கடமை​யும் பொறுப்​பும் மத்​திய அரசுக்கு உள்​ளது. திமுக அங்​கம் வகித்த காங்​கிரஸ் அரசிலும் இதே நிலைப்​பாடு தான். அதேசம​யம், இது​வரை​யிலும் இந்​திய பிரதமர்​களாக இருந்​தவர்​களில் அதி​க​மாகத் தமிழை போற்றி உலகள​வில் எடுத்​துச் சென்​றது பிரதமர் நரேந்​திர மோடி அவர்​கள் மட்​டுமே.

தமிழ்​நாடு அரசின் கீழ் தஞ்சை தமிழ் பல்​கலை​கழ​கம், உலக தமி​ழ​ராய்ச்சி நிறு​வனம் மற்​றும் மதுரை தமிழ்ச் சங்​கம் ஆகிய மூன்று ஆய்வு மற்​றும் கல்வி நிறு​வனங்​கள் உள்​ளன. இந்த மூன்​றுக்​கும் சேர்த்து தமிழ்​நாடு அரசு ஒதுக்​கும் நிதி​யுடன் ஒப்​பிட்​டால் செம்​மொழி தமி​ழாய்வு மத்​திய நிறு​வனத்​திற்கு மட்​டும் மத்​திய அரசு 2025-ல் ஒதுக்கி இருக்​கும் ரூ.17 கோடி என்​பது அதி​கமே.

மீண்​டும் அதி​முக - பாஜக கூட்​டணி ஏற்​பட்ட பிறகும் அதி​முக தலை​வர்​களை அண்​ணா​மலை விமர்​சிப்​பது நிற்​க​வில்​லை​யே?

அவர் அப்​படி எது​வும் விமர்​சிக்​க​வில்​லை. இது எதிர்​கட்​சி​களின் தவறான பிரச்​சா​ரம்.

தெளி​வாகச் சொல்​லுங்​கள்​... 2026-ல் தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யா... என்​டிஏ கூட்​ட​ணி​யின் ஆட்​சி​யா?

அதி​முக தலை​மையி​லான கூட்​டணி திமுக-வை வீழ்த்தி வெற்றி பெறும். தமி​ழ​கத்​தில் ஆட்​சி​யமைக்​கும்.

ஆனால், இந்த விஷ​யத்​தில் அதி​முக-​வும் பாஜக-​வும் பிறகு பார்த்​துக் கொள்​ளலாம் என்ற கணக்​கில் பூடக​மாகவே பதிலளித்து வரு​கின்​ற​ன​வே?

தேவை​யில்​லாத கேள்வி​களுக்கு பதில் சொல்​வ​தில் அர்த்​தமில்லை தானே.

கூட்​டணி ஆட்சி தான் என அழுத்​தம் கொடுத்​தால் கூட்​ட​ணியை விட்டு அதி​முக வெளி​யேறி​விடும் என்​ப​தால் பாஜக-​வும் இந்த விஷ​யத்​தில் இப்​போதைக்கு அடக்கி வாசிக்​கிறதோ?

இந்த கேள்வி திமுக கூட்​ட​ணிக்​கும் பொருந்​தும் தானே? ஆனால், அதன் தலை​வர்​களிடம் கேட்​கப்​படு​வ​தில்​லை​யே... ஏன்?

வைகோ-வுக்கு மீண்​டும் திமுக ராஜ்யசபா சீட் கொடுக்​காததை எப்​படிப் பார்க்​கிறீர்​கள்?

திமுக-​விடமே கேட்​கப்பட வேண்​டிய கேள்​வி.

திமுக கூட்​ட​ணி​யில் உள்ள ஒரு கட்​சி​யுடன் பேசி வரு​வ​தாக சொல்​கி​றாரே மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன்​... அது மதி​முக என்​பது உண்​மை​யா?

ரகசி​யங்​கள் வெளி​யில் சொல்​வதற்​கில்​லை.

அண்​ணா​மலை தலை​வ​ராக இருந்த போது தமிழக பாஜக-வுக்கு இருந்த துடிப்பு இப்​போது இல்லை என்​பதை ஒத்​துக்கொள்​கிறீர்​களா?

பாஜக தமி​ழ​கத்​தில் வளர்ந்து கொண்​டே​யிருக்​கிறது.

தமிழக பாஜக-வுக்கு ஒரு பரபரப்பு முகம் கொடுத்த அண்​ணா​மலையை பாஜக உரிய முறை​யில் பயன்​படுத்​த​வில்​லை​யோ?

பாஜக, தொண்​டர்​களின் கட்​சி. அண்​ணா​மலை அவர்​கள் பாஜக-வுக்கு கிடைத்த மாணிக்​கம்.

தேர்​தல் நெருங்க நெருங்க அமலாக்​கத்​துறை​யும் வரு​மான வரித்​துறை​யும் திமுக-வை இன்​னும் கூடு​தலாக நெருக்​கும் என்​கி​றார்​களே..?

தேர்​தல் நெருங்க நெருங்க, திமுக சட்ட விரோத​மாக வரு​வாய் ஈட்​டி​னால் அந்த துறை​களின் அமைப்​பு​கள் நெருக்க வாய்ப்​பிருக்​கிறது. அந்த அமைப்​பு​களுக்கு தேர்​தல் காலம், அது இல்​லாத காலம் என்​றெல்​லாம் ஒன்று இல்​லை.

ஐம்​பது தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை தயார்​படுத்​துங்​கள் என அமித் ஷா சொன்​ன​தாக செய்​தி​கள் வெளி​யானதே... அப்​படி​யா​னால், அதி​முக-​விடம் ஐம்​பது தொகு​தி​களை கேட்​கப் போகிறதா பாஜக?

யூகங்​களுக்கு நான் பதில் சொல்ல மாட்​டேன்.

மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக-வுக்கு தோள் கொடுத்த தினகரனை​யும், ஓபிஎஸ்​ஸை​யும் பாஜக இப்​போது அதி​முக-வுக்​காக ஒதுக்கி வைத்​திருப்​பது போலத்​தானே தெரி​கிறது?

கண்​ணால் காண்​பதும் பொய்​... காதால் கேட்​பதும் பொய்.

திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் கட்​சிகள் எல்​லாம் இம்​முறை கூடு​தல் தொகு​தி​களைக் கேட்​போம் என, பேசி வைத்​தாற்​போல் சொல்லி வரு​வதை கவனித்​தீர்​களா?

சில பல கோடிகளுக்​காகப் பேரம் பேசுகின்றன எனக் கருதுகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x