Published : 30 Jun 2025 04:42 AM
Last Updated : 30 Jun 2025 04:42 AM

திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில், நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: திமுக கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்ய அவசி​யமில்லை என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்​வாகக் குழு கூட்​டம் கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ் தலை​மை​யில் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுச்​செய​லா​ளர் வைகோ சிறப்​புரை ஆற்​றி​னார்.

பொருளாளர் மு.செந்​தில​திபன், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் மல்லை சத்​யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடு​துறை இரா.​முரு​கன், தி.​மு.​ராஜேந்​திரன், ரொஹையா மற்​றும் நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: தமிழகத்தை வளர்ச்​சிப் பாதை​யில் முன்​னெடுத்​துச் செல்​லும் திமுக அரசு தொடர​வும், இந்​துத்​துவ மதவாத சக்​தி​களை முறியடிக்​க​வும் கூட்​டணி என்ற மதி​முக எடுத்த முடிவை வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் கடைப்​பிடிப்​போம்.

அரசி​யலமைப்​பில் மதச்​சார்​பற்ற, சோசலிச எனும் வார்த்​தைகளை நீக்க வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் கூறி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. முரு​கன் மாநாட்​டில் பெரி​யார், முன்​னாள் முதல்​வர் அண்​ணாதுரையை சிறுமைப்​படுத்தி வெளி​யான காணொலிக்கு கடும் கண்​டனம். திருச்​சி​யில் நடை​பெறவுள்ள முன்​னாள் முதல்​வர் அண்ணா பிறந்​த​நாள் மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்​து​வதற்​கும், தேர்​தல் வேலைகளை முன்​னெடுக்​க​வும் ஜூலை 1 முதல் 17-ம் தேதி வரை​யில் நடை​பெறும் மண்டல வாரி​யான செயல்​வீரர்​கள் கூட்​டங்​களை திட்​ட​மிட்டு மாவட்ட அமைப்​பு​கள் செய​லாற்ற வேண்​டும் என்பன உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் வைகோ கூறிய​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி அரசுக்கு அவசி​யமில்​லாத வகை​யில் திமுக வெற்றி பெறு​வதற்​காக மதி​முக பாடு​படு​ம். பெண்​களின் வாக்​கு​களில் 90 சதவீதம் திமுகவை சென்​றடை​யும். இரட்டை இலக்​கத்​தில் தொகு​தி​கள் கேட்​போம் என கூட்​டத்​தில் நான் சொல்​ல​வில்​லை. கட்சி அங்​கீ​காரத்​துக்கு 8 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் இருக்க வேண்​டும். இதற்​காக தோ​ராய​மாக 12 தொகு​தி​களில் போட்​டி​யிடலாம் எனவும், முடிவு தலைமை எடுக்​கும் எனவும் முதன்​மைச் செய​லா​ளர் கூறி​யிருந்​தார்.

இந்​துத்​துவா சக்​தி​கள் தமிழகத்​தில் காலூன்​றக் கூடாது என்​ப​தற்​காக​வும் திரா​விட இயக்​கத்தை பாது​காப்​ப​தற்​காக​வும் திமுக​வுடன் கூட்​டணி அமைத்​தோம். தற்​போதும் அதே நிலைப்​பாட்​டில் இருக்​கிறோம். அதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டிய அவசி​யமில்​லை. தமிழக மக்​களின் முக்​கிய பிரச்​சினை​களுக்கு போ​ராடி மதி​முக வெற்றி பெற்​றிருக்​கிறது. மதி​முக​வினர் விரக்​தி​யில் இல்​லை. எந்​தச் சூழ்​நிலைக்​கும் தயா​ராக இருப்​போம். வரும் தேர்​தலில் அதி​முக, பாஜக கூட்​டணி வெற்றி பெறாத நிலை​யில், மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறும் கூட்​டணி ஆட்சி குறித்து சிந்​திக்​க வேண்​டிய​தில்​லை. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x