Published : 30 Jun 2025 12:15 AM
Last Updated : 30 Jun 2025 12:15 AM

விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் - காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

இடது: உயிரிழந்த காவலாளி அஜித்குமார் | வலது: மடப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்.

திருப்புவனம்: நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்​பவரது நகைகள் திருடு​போய்​விட்​டன. இது தொடர்​பான புகாரின் பேரில் அஜித்​கு​மார் உள்​ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

பின்​னர், அஜித்​கு​மாரை நேற்று முன்​தினம் விடு​வித்​தனர். வெளியே வந்த அவரை மீண்​டும் மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படை போலீ​ஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்போது, உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக கூறி அஜித்​கு​மாரை மதுரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்​கு கொண்டு சென்​றுள்​ளனர். அவரை பரிசோ​தித்த டாக்​டர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். பின்​னர், பிரேதப் பரிசோதனைக்​காக அஜித்​கு​மாரின் உடலை மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு போலீ​ஸார் கொண்டு சென்​றனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக திருப்​புவனம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை மேற்​கொண்​டனர். இதற்​கிடை​யில், மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படையைச் சேர்ந்த காவலர்​கள் பிரபு, கண்​ணன், சங்​கரமணி​கண்​டன், ராஜா, ஆனந்த், ராமச்​சந்​திரன் ஆகிய 6 பேரை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் கண்​காணிப்​பாளர் ஆஷிஷ் ராவத் உத்​தர​விட்​டார். மேலும், சம்​பவம் தொடர்​பாக திருப்​புவனம் மாவட்ட உரிமை​யியல் மற்​றும் குற்​ற​வியல் நடு​வர் வெங்​கடேஷ் பிர​சாத் நேற்று விசா​ரணை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில், பிரேதப் பரிசோதனை செய்​வதற்கு அஜித்​கு​மாரின் உறவினர்​கள் எதிர்ப்​பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அஜித்​கு​மாரை கொன்ற காவலர்​களை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும், குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என அவர்​கள் வலி​யுறுத்​தினர்.

அப்​போது, அஜித்​கு​மாரின் தாயார் மால​தி, சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை திமுக பிர​முகர் ஒரு​வரது காரில் ஏற்​றி, உடலை வாங்குவதற்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல முற்​பட்​டனர். இதற்கு எதிர்ப்​பு தெரி​வித்து கிராம மக்​கள் மற்​றும் அதி​முக எம்​எல்ஏ செந்​தில்​நாதன் தலை​மையி​லான கட்​சி​யினர் மறியலில் ஈடு​பட்​டனர்.

அவர்​களை சமா​தானப்​படுத்​திய போலீ​ஸார், அஜித்​கு​மாரின் தாயார், சகோ​தரரை காவல் துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்​துச் சென்​றனர். வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டு, அஜித்​கு​மார் உடல் குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

தலை​வர்​கள் கண்​டனம்: மடப்​புரத்​தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்​பவத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: காவல் துறையை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்க வேண்​டிய முதல்​வர் கண்​டும் காணா​மல் இருப்ப​தால் அப்​பாவி மக்​கள் உயி​ரிழக்​கின்​றனர். மடப்​புரம் சம்​பவத்​துக்கு முதல்​வர் என்ன சொல்​லப் போகிறார்?

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஒரு​வர் தவறு செய்​த​தாக காவல் துறை கரு​தி​னால், கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஒப்​படைத்​து, உரிய சட்ட நெறி​முறையைப் பின்​பற்ற வேண்​டும். சட்​டத்தை கைகளில் எடுத்​துக்​கொள்​ளக் கூடாது. தனது நேரடிக் கட்​டுப்​பாட்​டில் உள்ள காவல் துறையைக்​கூட நிர்​வகிக்​கத் தெரி​யாத முதல்​வருக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன். மாவட்ட நீதிபதி தலைமையி​லான குழு விசா​ரணை நடத்​தி, உயி​ரிழப்​புக்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இறந்​தவர் குடும்​பத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திமுக ஆட்​சி​யில் காவல் நிலை​யத்​துக்கு வரு​வோரின் உயிர்​களுக்​கு பாது​காப்பு இல்​லாத நிலை உரு​வாகி​யுள்​ளது. காவல் துறை​யின் அராஜக போக்​குக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ்: சாத்​தான்​குளம் படு​கொலை​போல, மடப்​புரம் சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. இதற்​காக காவல் துறை​யும், முதல்​வரும் தலைகுனிய வேண்​டும். இச்​சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று முதல்​வர் பதவி விலக வேண்​டும்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: பாலியல் குற்​றங்​களில் ஈடு​படும், போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​யும்
திமுக​வினர் யாரும் காவல் துறை​யால் தாக்​கப்​படு​வ​தில்​லை. சிறிய குற்​றங்​களில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​படும் அப்​பாவி​களைக் காவல் துறை கடுமை​யாகத் தாக்​கு​வது அதி​கரித்​துள்​ளது. 2022-ம் ஆண்​டிலிருந்து 23 பேர் காவல் துறை விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​துள்​ளனர். ஆனால், முதல்​வர் எந்​தக் கவலை​யுமின்றி இருக்​கிறார்.

இதே​போல, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாதக தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான், தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x