Published : 29 Jun 2025 09:06 AM
Last Updated : 29 Jun 2025 09:06 AM
எம்ஜிஆருக்கு தனிச்செயலராக 1972 முதல் 1987 வரை இருந்த மகாலிங்கம் (73) காலமானார். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ப தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், பெசன்ட்நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு சுமதி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வன், புவனேஷ் என்ற மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
மகாலிங்கம் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் தனி உதவியாளராக பணியாற்றிய கே.மகாலிங்கம், உடல்நலக் குறைவால் காலமனார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகாலிங்கத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT