Last Updated : 29 Jun, 2025 09:07 AM

6  

Published : 29 Jun 2025 09:07 AM
Last Updated : 29 Jun 2025 09:07 AM

‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு...’ - ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. திமுக கூட்டணியில் அவர் நினைப்பது சாத்தியப்படுமா என்று தெரியாத நிலையில், கோவையில் இம்முறை தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்க வேண்டும் என மதிமுக-வினர் உரிமைக் கொடி தூக்கி இருக்கிறார்கள்.

பஞ்​சாலை​கள், தொழில் நிறு​வனங்​கள், தொழிற்​சாலை​கள் அதி​கம் உள்ள கோவை மாவட்​டத்​தில் மதி​முக-வுக்கு குறிப்​பிடத்​தக்க செல்​வாக்கு உண்​டு. இப்​போதும் வைகோ கோவைக்கு வந்​தால் விமான நிலை​யத்​தில் திரளும் தொண்​டர்​களே அதற்கு சாட்​சி. மதி​முக-வை வைகோ தொடங்​கிய போது அவருக்கு பின்​னால் நின்ற தளகர்த்​தர்​களில் ஒரு​வ​ரான முன்​னாள் அமைச்​சர் மு.கண்​ணப்​பன் உள்​ளிட்​டோர் இப்​பகு​தி​யைச் சேர்ந்​தவர்​களே. இத்​தனை இருந்​தா​லும் கோவை பகு​தி​யில் போட்​டி​யிட மதி​முக பெரி​தாக மெனக்​கிட்​டது இல்​லை.

2016-ல், மக்​கள் நல கூட்​ட​ணி​யில் இருந்த போது கோவை சிங்​காநல்​லூர் தொகு​தி​யில் மதி​முக போட்​டி​யிட்​டது. அதன் பிறகு கோவையை மதி​முக பெரி​தாக கருத​வில்​லை. இந்​தச் சூழலில் 2026-ல் கோவை​யில் ஒரு தொகு​தி​யில் மதி​முக போட்​டி​யிடும் வகை​யில் திமுக-​விடம் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என கோவை மதி​முக-​வினர் தலை​மையை நச்​சரித்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து பேசிய கோவை மதி​முக நிர்​வாகி​கள் சிலர், “கொங்கு மண்​டலத்​தில் கோவை, ஈரோடு மாவட்​டங்​களில் மதி​முக வலு​வாக உள்​ளது. திரா​விட இயக்க மூத்த முன்​னோடிகள், தனிப்​பட்ட முறை​யில் வைகோவுக்​கென இருக்​கும் ஆதர​வாளர்​கள், மதி​முக ஆதர​வாளர்​கள் கணிச​மாக கோவை​யில் உள்​ளனர். எனவே தான் அவைத் தலை​வர், உயர்​நிலை செயல்​திட்​டக் குழு உறுப்​பினர் உள்​ளிட்ட முக்​கிய பதவி​களில் கோவையைச் சேர்ந்​தவர்​கள் இருக்​கி​றார்​கள்.

கோவை​யில் ஏதாவது ஒரு தொகு​தி​யில் மதி​முக போட்​டி​யிட வேண்​டும் என கடந்த தேர்​தலிலேயே கோரிக்கை வைத்​தோம். அப்​போது எங்​களுக்கு கோவை வடக்கு ஒதுக்​கப்​படு​வ​தாக இருந்​தது. ஆனால், கோவை வடக்​கில் பண பலம் பொருந்​திய காண்ட்​ராக்​டர் ஒரு​வரை அதி​முக நிறுத்​தப் போவ​தாக அப்​போது பேச்சு அடிபட்​டது. அப்​படி நிறுத்​தப்பட்டால் அவரைச் சமாளிக்க மதி​முக-​வால் முடி​யாது, திமுக தான் சரிப்​பட்டு வரும் என திமுக தலைமை எண்​ணி​யது. அதனால் கோவை வடக்கு தொகு​திக்கு பதிலாக பல்​லடம் தொகு​தியை மதி​முக-வுக்கு தந்​தார்​கள்.

கடந்த முறை கோவை வடக்​கில் திமுக போட்​டி​யிட்​டது. ஆனால், அதி​முக சார்​பில் அந்த கண்ட்​ராக்​டர் போட்​டி​யிட​வில்​லை. அது​மட்​டுமல்​லாது கோவை​யில் ஒரு தொகு​தி​யில் கூட திமுக வெற்​றி​பெற​வில்​லை. ஒரு​வேளை, கோவை வடக்கை மதி​முக-வுக்கு தந்​திருந்​தால் அதில் வெற்றி கிடைத்​திருக்​கலாம். எனவே, கடந்த முறையை போல் எதை​யா​வது சொல்லி மறுக்காமல் இம்​முறை கோவை​யில் ஏதாவது ஒரு தொகு​தியை மதி​முக-வுக்கு ஒதுக்​கவைக்க வேண்​டும் என தலை​மைக்கு வலி​யுறுத்தி இருக்​கி​றோம்” என்​ற​னர்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய கோவை மாவட்ட மதி​முக செய​லா​ளர் கணபதி செல்​வ​ராஜ், “கோவை வடக்கு அல்​லது கோவை தெற்கு தொகு​தியை இம்​முறை நமக்​குக் கேட்​டுப் பெற வேண்​டும் என தலை​மை​யிடம் சொல்லி இருக்​கி​றோம். கோவை​யில் அனைத்து வார்​டு​களி​லும் மதி​முக-வுக்கு முழு​மை​யான கட்​டமைப்பு உள்​ளது. தொண்​டர்​களின் ஆதர​வும் உள்​ளது. இதையெல்​லாம் மனதில் வைத்​துத்​தான் கோவை​யில் ஒரு தொகு​தி​யைக் கேட்​கி​றோம். இம்​முறை நிச்​ச​யம் அது கிடைக்​கும் என நம்​பு​கி​றோம்” என்​றார்.

கணபதி செல்வராஜ்

கோவை திமுக நிர்​வாகி​களோ, “கடந்த முறை எங்​களாலேயே கோவை​யில் ஒரு தொகு​தி​யில் கூட ஜெயிக்க முடிய​வில்​லை. அப்​படி இருக்​கை​யில் மதி​முக-வுக்கு ஒரு தொகு​தி​யைக் கொடுத்​திருந்​தால் அவர்​கள் ஜெயித்​திருப்​பார்​களா என்று தெரி​யாது. இந்​தத் தொகுதி எங்​களுக்கு வேண்​டும் என கூட்​டணி தலை​மை​யிடம் கூட்​ட​ணிக் கட்​சிகள் கேட்​பது இயல்​பான ஒன்று தான். ஆனால், இந்த விஷ​யத்​தில் இறுதி முடி​வெடுக்க வேண்​டியது கூட்​டணி தலைமை தான். ஆசைப்​படு​வது எல்​லா​முமா கிடைத்து விடு​கிறது” என்று அர்த்​த​மாய் சிரிக்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x