Published : 29 Jun 2025 12:45 AM
Last Updated : 29 Jun 2025 12:45 AM

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: நீர்வரத்து 80,984 கனஅடியாக உயர்வு

மேட்​டூர் அணை​யின் மேல்​மட்​ட 8 கண்​ மதகு வழி​யாக டெல்​டா பாசனத்​துக்​கு பாய்ந்தோடும்​ கா​விரி நீர்​.

மேட்டூர் / தருமபுரி: நீர்​வரத்து விநாடிக்கு 80,984 கனஅடி​யாக உயர்ந்​துள்ள நிலை​யில், மேட்​டூர் அணை விரை​வில் முழு கொள்​ளளவை எட்டி உபரிநீர் திறக்​கப்பட வாய்ப்​புள்​ள​தால், 11 மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் கனமழை காரண​மாக கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பி, உபரிநீர் காவிரி​யில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 60,740 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 73,452 கனஅடி​யாக​வும், மாலை​யில் 80,984 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 22,500 கனஅடியி​லிருந்து 26,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

நீர் திறப்பை விட தண்​ணீர் வரத்து அதி​க​மாக உள்​ள​தால் அணை நீர்​மட்​டம் அதி​கரித்து வரு​கிறது. நீர்​மட்​டம் நேற்று 117.93 அடி​யாக​வும், நீர் இருப்பு 90.20 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அணை​யின் முழு கொள்​ளள​வான 120 அடியை எட்ட இன்​னும் 2.07 அடி தான் தேவை. இந்​நிலை​யில், சேலம், ஈரோடு, நாமக்​கல், கரூர், திருச்​சி, அரியலூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கு, மேட்​டூர் அணை உதவி செயற் பொறி​யாளர் செல்​வ​ராஜ் கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

அதில், “மேட்​டூர் அணை விரை​வில் 120 அடியை எட்​டும் என்​ப​தால், காவிரி ஆற்​றில் விநாடிக்கு 50,000 முதல் 75,000 கனஅடி வரை உபரி நீர் திறந்து விடப்​படலாம். எனவே, காவிரிக் கரையோரம் மற்​றும் தாழ்​வான பகு​தி​களில் வசிக்​கும் மக்​களின் பாது​காப்​புக்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் இரவு 88 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 78 ஆயிரம் கனஅடி​யாக​வும், மாலை 3 மணி​யள​வில் 70 ஆயிரம் கனஅடி​யாக​வும் குறைந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x