Last Updated : 27 Jun, 2025 08:33 AM

 

Published : 27 Jun 2025 08:33 AM
Last Updated : 27 Jun 2025 08:33 AM

யாருக்கு ‘செக்’ வைக்க செந்தில் பாலாஜி அப்படி பேசினார்? - நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகவில் பரபரக்கும் விவாதம்!

கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி | உள்படம்: கே.எஸ்.மூர்த்தி

“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இப்படி பேசியதை வைத்து நாமக்கல் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.

நாமக்​கல் மாவட்ட திமுக கிழக்​கு, மேற்கு என இரண்​டாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இரண்டு மாவட்​டங்​களி​லும் வரும் 6 தொகு​தி​களை​யும் வென்​றெடுக்​கும் பொறுப்​பில் இருக்​கும் செந்​தில்​பாலாஜி, மேற்கு மாவட்​டத்​துக்கு மட்​டும் தனி கவனம் செலுத்​தப் போவ​தாகச் சொன்​னதன் பின்​னணி​யில் முன்​னாள் அதி​முக அமைச்​சர் தங்​கமணி இருக்​கி​றார் என்று ஒரு தரப்​பும், மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் கே.எஸ்​.மூர்த்​தியை இம்​முறை தெறிக்​க​விட வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் செந்​தில்​பாலாஜி அப்​படிப் பேசி​னார் என்று ஒருதரப்​பும் விவாதம் நடத்​திக் கொண்​டிருக்​கின்​றன.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய நாமக்​கல் மேற்கு மாவட்ட திமுக-​வினர் சிலர், “மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரான மூர்த்தி 2016-ல் பரமத்தி வேலூர் தொகு​தி​யில் நின்று வென்​றார். அப்​போது மாவட்​டத்​தின் ஒரே திமுக எம்​எல்ஏ அவர் மட்​டும் தான். அதை வாய்ப்​பாக பயன்​படுத்தி அதி​முக அமைச்​சர் தங்​கமணி​யுடன் நட்பு பாராட்​டி​னார். இருந்த போதும் 2021-லும் அவருக்கு தலைமை சீட் கொடுத்​தது. ஆனால், இம்​முறை அவரால் வெல்​ல​முடிய​வில்​லை. மேற்கு மாவட்​டத்​தில் வரும் குமார​பாளை​யத்​தில் தங்​கமணி மீண்​டும் வெற்​றி​பெற்​றார். திருச்​செங்கோட்​டில் மட்​டும் திமுக கூட்​டணி கட்​சி​யான கொமதேக நூலிழை​யில் வெற்​றி​பெற்​றது.

தேர்​தல் தோல்விக்​கான காரணம் குறித்து திமுக தலைமை விசா​ரணை நடத்​திய போது, குமார​பாளை​யத்​தில் போட்​டி​யிட்ட வெங்​க​டாசலம், மூர்த்​திக்கு எதி​ராக ஸ்டா​லினிடம் பகிரங்​க​மாகவே குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கி​னார். இந்த நிலை​யில், அடுத்​த​தாக வந்த உள்​ளாட்​சித் தேர்​தலில் திருச்​செங்​கோடு, பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யம் ஆகிய 3 நகராட்​சிகளி​லும் திமுக வேட்​பாளரை மூர்த்​தி​யால் சேர்​ம​னாக கொண்​டு​வர​ முடிய​வில்​லை. இதையடுத்து மூர்த்​தியை தூக்​கி​விட்​டு, இளைஞரணி​யைச் சேர்ந்த மதுரா செந்​திலை மாவட்​டச் செய​லா​ள​ராக்​கியது தலைமை.

இந்த நிலை​யில் சில மாதங்​களுக்கு முன்​பு, மதுரா செந்​திலை தூக்​கி​விட்டு மீண்​டும் மூர்த்​தி​யையே மேற்கு மாவட்​டச் செய​லா​ளராக தலைமை நியமித்​தது. இப்​படி​யாக மேற்கு மாவட்​டத்​தில் ஒரு நிலை​யற்ற தன்மை நில​வுவதைக் கவனத்​தில் கொண்​டும், மூர்த்​தி​யின் கடந்த கால செயல்​பாடு​களை கருத்​தில் வைத்​தும் செந்​தில்​பாலாஜி அப்​படி பேசி இருக்​கலாம்.

அதேசம​யம் அதி​முக மாவட்​டச் செய​லா​ள​ரு​ம் முன்​னாள் அமைச்சருமான தங்​கமணி தொடர்ந்து 4-வது முறை​யாக எம்​எல்​ஏ-​வாக இருக்​கி​றார். அவரது குமார​பாளை​யம், ஏற்​கெனவே வென்ற திருச்செங்கோடு தொகு​தி​கள் மேற்கு மாவட்​டத்​தில் வரு​கின்​றன. அதனால், இம்​முறை தங்​கமணி​யை​யும் தோற்​கடித்​துக் காட்​டு​வேன் என்ற எண்​ணத்​தி​லும் செந்​தில்​பாலாஜி அப்​படி பேசி இருக்​கலாம்” என்று சொன்​னார்​கள்.

இதுகுறித்து மேற்கு மாவட்ட திமுக செய​லா​ளர் கே.எஸ்​.மூர்த்​தி​யிடம் கேட்​டதற்​கு, “மேற்கு மண்​டலத்​தில் வரும் 35 தொகு​தி​களுக்​கும் செந்​தில்​பாலாஜி பொறுப்​பாளர். அப்​படி​யிருக்க, இங்கு மட்​டும் தனி கவனம் செலுத்​த​முடி​யுமா என்ன? கட்​சி​யினரை உற்​சாகப்​படுத்​து​வதற்​காக அவர் அப்படி பேசி இருக்​கலாம். என் மீது அவருக்கு பிரி​யம் அதி​கம். அதனால் கூட அப்​படி பேசி இருக்​கலாம்” என்​றார்.

கடந்த முறை, நீங்​கள் அதி​முக முன்​னாள் அமைச்​சர் தங்​கமணி​யிடம் நட்பு பாராட்​டிய​தாக ஒரு குற்​றச்​சாட்டு இருந்​தது. அதனால் அதை மனதில் வைத்​தும் செந்​தில்​பாலாஜி அப்​படி பேசி இருக்​கலாம் என்​கி​றார்​களே என்று கேட்​டதற்​கு, “அதி​முக-​வினர் வீட்டு துக்க நிகழ்ச்​சிக்கு கூட நான் செல்​வ​தில்​லை. சிறு வயது முதலே கலைஞர் எனக்​குள் ஊறிப்​போன​வர். அவரை பிடித்​த​தால் தான் கட்​சிக்கு வந்​தேன். 40 ஆண்​டு​களாக கட்​சி​யில் உள்ளேன். தங்​கமணி​யுடன் தொடர்பு வைக்​கும் அளவுக்கு என் அம்மா எனக்கு பால் வார்​க்​கவில்​லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x