Last Updated : 21 Jun, 2025 09:53 AM

2  

Published : 21 Jun 2025 09:53 AM
Last Updated : 21 Jun 2025 09:53 AM

அன்புமணிக்கு பின்னால் அணிவகுப்பவர்கள் கட்சி விரோதிகளா? - ராமதாஸை கேள்வி கேட்கும் பாமக நிர்வாகிகள்!

“நான் உயிரோடு இருக்கும் வரை பாமக-வுக்கு தலைவர் நான் தான்” என்று திடமாகச் சொல்கிறார் மருத்துவர் ராமதாஸ். பதிலுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அய்யா அவர்களுக்கு சுகர், பிபீ எல்லாம் இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளோடும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும். என் மீது ஏதாவது தவறு இருந்தால் அய்யா அவர்களே... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று டச்சிங்காக பேசி, ராமதாஸ் நிழலில் தேங்கி நிற்கும் சொச்ச நிர்வாகிகளையும் சொல்லாமல் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இவர்களுக்கு மத்தியில் ஜி.கே.மணி போன்றவர்கள், “பாமக-வுக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சீக்கிரமே முடிவுக்கு வரும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடு​வில், தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் நடக்​கும் அதி​கார யுத்​தம் நாளுக்கு நாள் உக்​ர​மாகிக் கொண்டே வரு​வ​தால் கீழ்​மட்ட நிர்​வாகி​கள் யார் பக்​கம் நிற்​பது என்று தெரி​யாமல் குழம்​பிக் கிடக்​கி​றார்​கள். ஏதாவது ஒரு பக்​கம் சாய்​பவர்​களை அப்​பா​வும் மகனும் மாறி மாறி பொறுப்​பு​களை விட்டு நீக்​கு​வதும் சேர்ப்​பது​மாக பரமப​தம் ஆடிக் கொண்​டிருப்​பதே இவர்​களின் குழப்​பத்​துக்​குக் காரணம்.

கட்​சிக்​குள் இத்​தனை களேபரங்​கள் நடந்து கொண்​டிருக்​கை​யில் திமுக அரசுக்கு எதி​ரான, தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்தை ஜூலை 25-ல் தொடங்​கு​வ​தாக அறி​வித்​திருக்​கி​றார் அன்​புமணி. தமி​ழ​கம் முழு​வதும் மேற்​கொள்ள இருக்​கும் இந்த 100 நாள் பயணத்​துக்கு தனது விசு​வாசிகளை தயார்​படுத்​தும் வித​மாக, மாவட்ட அளவி​லான பொதுக்​குழு கூட்​டங்​களை இப்​போது நடத்​திக் கொண்​டிருக்​கி​றார் அன்​புமணி.

எங்கு சுற்​றி​யும் எதிர்​காலத்​தில் கட்சி இவர் கைக்​குத்​தானே வரப்​போகிறது என்ற எண்​ணத்​தில், அன்​புமணி கூட்​டும் பொதுக்​குழு கூட்​டங்​களில் திரளான நிர்​வாகி​கள் தில்​லாக பங்​கேற்று வரு​கி​றார்​கள். தமிழக மக்​களுக்​கான உரிமைப் மீட்​புப் பயணம் என்​பதை விட கட்​சிக்​குள் தனது உரிமையை மீட்​ப​தற்​கான பயண​மாகவே இந்த 100 நாள் பயண ‘திட்​டத்​தை’ வடிவ​மைத்து வரு​கி​றார் அன்​புமணி.

அண்​மை​யில் வேலூர், திருப்​பத்​தூர், திரு​வண்​ணா​மலை மாவட்ட பொதுக்​குழு கூட்​டத்​துக்​காக வருகை தந்த அன்​புமணிக்கு பாமக-​வினர் உற்​சாக வரவேற்​பளித்து அவரை குஷிப்​படுத்​தினர். இந்த நிகழ்ச்​சி​யில் மாவட்ட அளவி​லான அனைத்​துப் பொறுப்​பாளர்​களும் கலந்து கொண்டு அன்​புமணிக்கு ஆரவார வரவேற்பு கொடுத்​தனர். பதி​லுக்கு அவரும் கட்சி நிர்​வாகி​களிடம் வழக்​கத்தை மீறிய கனிவுடன் பேசி வியப்​பூட்​டி​னார்.

இந்​தக் கூட்​டத்​தில் கலந்து கொண்ட நிர்​வாகி​கள் சிலர் நம்​மிடம் பேசுகை​யில், “பாமக-வுக்கு இது இக்​கட்​டான நேரம். அதேசம​யம், தேர்​தல் கூப்​பிடு தொலை​வில் இருக்​கை​யில் இப்​படி அப்​பா​வும் பிள்​ளை​யும் நீயா நானா யுத்​தம் நடத்​து​வது மற்ற கட்​சிகளுக்கு இளக்​கார​மாகப் போய்​விடும். பாமக எந்​தப் பக்​கம் சாயப் போகிறது என மற்ற கட்​சிகள் எதிர்​பார்த்​துக் காத்​திருக்க வேண்​டிய இந்த நேரத்​தில், ‘முதலில் அப்​பா​வும் பிள்​ளை​யும் சமா​தானத்​துக்கு வரட்​டும்; அப்​புறம் பார்க்​கலாம்’ என்று பாமக-வை உதாசீன​மாக பேசிக்​கொண்​டிருக்​கி​றார்​கள்.

மருத்​து​வர் அய்யா கூற்​றுப்​படியே பார்த்​தா​லும் அன்​புமணி பாமக செயல்​தலை​வ​ராக இருக்​கி​றார். அப்​படி இருக்​கை​யில், அவர் பின்​னால் செல்​பவர்​களை​யும், அவரது கூட்​டத்​தில் கலந்து கொள்​பவர்​களை​யும் கட்சி விரோ​தி​களாக நினைத்து அவர்​களை பொறுப்​பு​களை விட்டு நீக்​கு​கி​றார் அய்யா. அவரால் இப்​படி எத்​தனை பேரை நீக்​க​முடி​யும் என்று தெரிய​வில்​லை.

ஆனாலும், அய்யா என்ன நடவடிக்கை எடுத்​தா​லும் பரவா​யில்லை என்று தான் அன்​புமணி நிகழ்ச்​சிகளில் பாமக நிர்​வாகி​கள் தைரிய​மாக பங்​கேற்று வரு​கி​றார்​கள். இதை வைத்​துப் பார்க்​கை​யில், கட்சி அன்​புமணி கையில் இருக்க வேண்​டும் என்​பது​தான் பாமக நிர்​வாகி​கள் பெரும்​பகு​தி​யினரின் எதிர்​பார்ப்​பாக இருக்​கிறது” என்​றார்​கள்.

இது தொடர்​பாக மேலும் பேசிய திருப்​பத்​தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த பாமக மாநில செயற்​குழு உறுப்​பினர் ஜி.பொன்​னு​சாமி, “பாமக சமு​தாய உணர்​வோடு தொடங்​கப்​பட்ட கட்​சி. இதை கட்​டமைத்​த​தில் நிறு​வனர் ராம​தாஸின் உழைப்பு அளப்​பரியது. இதை யாரும் மறுக்​கவோ மறைக்​கவோ முடி​யாது. அந்த விதத்​தில், சமு​தாய பாது​காவல​ராக மருத்​து​வர் ராம​தாஸை தவிர இங்கு வேறு யாரை​யும் அடை​யாளம் காட்ட முடி​யாது. அதி​காரம் யார் கையில் இருப்​பது என்​பது தான் தற்​போதுள்ள பிரச்​சினை.

அன்​புமணியை தலை​வர் பதவி​யில் இருந்து இப்​போது நீக்​கி​விட்​டாலும் ராம​தாஸூக்கு பிறகு அன்​புமணி தான் தலை​வ​ராக வரு​வார். அதை இப்​போதே இருந்​து​விட்​டுப் போகட்​டுமே என்​பது தான் எங்​களைப் போன்​றவர்​களின் நிலைப்​பாடு. அதேசம​யம், இதனால் மருத்​து​வர் அய்​யா​வுக்கு மரி​யாதை குறைவு ஏற்​பட்​டால் அதை எங்​களால் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

கட்​சி​யின் எதிர்​காலம் அன்​புமணி தான் என்​ப​தால் அவருக்கு அனைத்து நிர்​வாகி​களும் ஒரு​முக​மாக நின்று வரவேற்பு அளித்​துள்​ளோம். அதே​போல், நாளைக்கே மருத்​து​வர் அய்யா எங்​கள் மாவட்​டத்​துக்கு வந்​தா​லும் அவருக்​கும் இதே​போன்ற வரவேற்​பை​யும், மரி​யாதையை​யும் நாங்​கள் அளிப்​போம். தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் இப்​போது நடப்​பது பனிப்​போர். இது எப்​போது வேண்​டு​மா​னாலும் முடிவுக்கு வந்​து​விடும். அது​வரை நாங்​கள் எல்​லாம் பாமக-​வின் எதிர்​காலம் கருதி சின்​ன​வரோடு சேர்​ந்து பயணிப்​போம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x