Published : 18 Jun 2025 05:45 AM
Last Updated : 18 Jun 2025 05:45 AM
சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில், போரூர் - பூந்தமல்லி பைபாஸ் இடையே உயர்மட்டப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மும்முரமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்த மாதம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) குழுவினர் இங்குவந்து பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கு முன், ஆர்டிஎஸ்ஓ சான்றிதழ் மற்றும் ரயில் பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் ஆகியவற்றை பெற வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT