Last Updated : 18 Jun, 2025 08:23 AM

 

Published : 18 Jun 2025 08:23 AM
Last Updated : 18 Jun 2025 08:23 AM

முருகனா... பாண்டியனா..? - முதுகுளத்தூருக்கு மல்லுக்கட்ட தயாராகும் அதிமுக - அமமுக!

முருகன், மலேசியா பாண்​டியன்

கடந்த முறையைப் போல இம்முறையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுமா என எதிர்பார்ப்புகள் எகிறிவரும் நிலையில், முதுகுளத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பனை எதிர்த்து நிற்பது யார் என்பதில் அதிமுக-வுக்கும் அமமுக-வுக்கும் இப்போதே போட்டி பலமாகி இருக்கிறது.

2021 தேர்​தலில் ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ராம​நாத​புரம், பரமக்​குடி, முதுகுளத்​தூர் தொகு​தி​களை திமுக மொத்​த​மாக அள்​ளியது. திரு​வா​டானையை கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸ் கைப்​பற்​றியது. இதே​போல் இம்​முறை​யும் நான்கு தொகு​தி​களை​யும் திமுக கூட்​ட​ணிக்கே சாதக​மாக்க இப்​போதே பணி​களை முடுக்கி விட்​டிருக்​கிறது திமுக. சிறு​பான்​மை​யினர் மற்​றும் பட்​டியலின மக்​களின் வாக்​கு​கள் கணிச​மாக இருக்​கும் மாவட்​டம் என்​ப​தால் ராம​நாத​புரம் மாவட்​டத்​தின் மீது தனிக்​கவனம் செலுத்​துகிறது திமுக.

இம்​முறை​யும் திரு​வா​டானையை காங்​கிரஸுக்​குத்​தான் திமுக ஒதுக்​கும். அங்கே சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான கரு​மாணிக்​கத்​துக்​குத்​தான் சீட் என திமுக-​வினரே தீர்​மான​மாக சொல்​கி​றார்​கள். அதே​போல், ராம​நாத​புரத்​தில் திமுக மாவட்​டச் செய​லா​ள​ரும் சிட்​டிங் எம்​எல்​ஏ-வு​மான காதர்​பாட்சா முத்​து​ரா​மலிங்​கத்​துக்​கும், முதுகுளத்​தூரில் அமைச்​சர் ராஜகண்​ணப்​பனுக்​கும் மீண்​டும் சீட் உறுதி என்​கி​றார்​கள். இந்த மூன்று தொகு​தி​களில், கடந்​த​முறை திரு​வா​டானை​யிலும், முதுகுளத்​தூரிலும் அதி​முக போட்​டி​யிட்​டது. ராம​நாத​புரத்​தில் அதி​முக பலத்​துடன் பாஜக போட்​டி​யிட்​டது.

இம்​முறை ராம​நாத​புரம் தொகு​தி​யில் போட்​டி​யிட அதி​முக தரப்​பில் முன்​னாள் அமைச்​சர்​கள் மணி​கண்​டன், அன்​வர் ராஜா ஆகி​யோர் ஆர்​வ​மாக இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். இவர்​களில் அன்​வர் ராஜாவுக்கு வாய்ப்பு பிர​காச​மாக இருக்​கிறது. இவர்​களைத் தவிர, மாவட்ட மகளிரணி செய​லா​ளர் கவிதா சசிக்​கு​மார், மண்​டபம் ஒன்​றியச் செய​லா​ளர் மருது​பாண்​டியன் உள்​ளிட்​டோரும் தங்​களுக்​கான சோர்​ஸ்​கள் மூல​மாக ராம​நாத​புரம் தொகு​தியை பெறு​வதற்​கான முயற்​சி​யில் இறங்கி இருக்​கி​றார்​கள்.

திரு​வா​டானை தொகு​தி​யில் போட்​டி​யிட கடந்த முறை அங்கு போட்​டி​யிட்ட முன்​னாள் மாவட்​டச் செய​லா​ளர் ஆனி​முத்​து, தற்​போதைய மாவட்​டச் செய​லா​ளர் முனிய​சாமி​யின் மனை​வி​யும், மாநில மகளிரணி இணைச் செய​லா​ள​ரு​மான கீர்த்​திகா முனிய​சாமி ஆகி​யோர் ஆட்​களைப் பிடித்து ஆகவேண்​டியதைப் பார்த்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள்.

கடந்த முறை அதி​முக-​வில் சீட் வழங்​காத​தால் முன்​னாள் அமைச்​சர் சுந்​தர்​ராஜன் திமுக-​வில் இணைந்​தார். இம்​முறை பரமக்​குடி தொகு​தி​யில் இவருக்கு திமுக வாய்ப்​பளிக்​கலாம் என்​கி​றார்​கள். சிட்​டிங் எம்​எல்​ஏ-​வான முரு​கேசன், போகலூர் ஒன்​றியச் செய​லா​ளர் கதிர​வன் உள்ளிட்டோரும் ரேஸில் இருக்​கி​றார்​கள்.

அதே​போல், திமுக-​வில் ஏமாற்​றம் கண்டு அதி​முக-​வில் இணைந்த முன்​னாள் மாவட்ட பதி​வாளர் பாலு பரமக்​குடிக்​காக ரூட் பிடித்து வரு​கி​றார். இவரைத் தவிர, முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சதன் பிர​பாகர், முத்​தையா ஆகி​யோ​ரும் பரமக்​குடிக்​காக மோதுகி​றார்​கள். தங்​களுக்​குச் சாதக​மான தொகுதி என பாஜக இந்​தத் தொகு​தி​யைக் கேட்​டால் பாஜக மாநில பொதுச்​செய​லா​ள​ரான பொன்​.​பால​கணப​திக்கு வாய்ப்​புக் கிடைக்​கலாம் என்​கி​றார்​கள்.

விஐபி தொகு​தி​யான முதுகுளத்​தூரில் இம்​முறை அமைச்​சர் ராஜகண்​ணப்​பனுக்கு சரி​யான போட்​டியை தரவேண்​டும் என திட்​ட​மிடும் அதி​முக தலை​மை, அங்கு கல்​லூரி அதிப​ரான மலேசியா பாண்​டியனை நிறுத்​தும் திட்​டத்​தில் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். இதே தொகு​தி​யில் கடந்த 2016 தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் வேட்​பாள​ராக போட்​டி​யிட்டு வென்​றவர் இந்த மலேசியா பாண்​டியன். 2021-லும் இங்கு தனக்கு மீண்​டும் சீட் கொடுக்​கும் காங்​கிரஸ் தலைமை என எதிர்​பார்த்​திருந்​தார். ஆனால், தொகு​தியை ராஜகண்​ணப்​பனுக்​காக எடுத்​துக் கொண்​டது திமுக. இதனால், கடும் அதிருப்​தி​யடைந்த மலேசியா பாண்​டியன், காங்​கிரஸை கைகழு​வி​விட்டு ஒதுங்கி இருந்​தார்.

இந்த நிலை​யில், கடந்த ஓராண்​டுக்கு முன்பு திடீரென அவர் அதி​முக-​வில் இணைந்​தார். “முதுகுளத்​தூர் தொகு​தி​யில் எனக்கு சீட் கொடுத்​தால் கண்​ணப்​பனை தோற்​கடித்​துக் காட்​டு​கிறேன்” என்று சொல்​லியே தான் மலேசியா பாண்​டியன் அதி​முக-​வில் இணைந்​த​தாகச் சொல்​வார்​கள். இந்​தத் தொகு​தி​யில் இன்​னொரு சிக்​கலும் இருக்​கிறது.

தென் மாவட்​டங்​களில் ஓரளவுக்கு செல்​வாக்கை வைத்​திருக்​கும் டி.டி.​வி.​தினகரனும் முதுகுளத்​தூர் தொகு​தியை தனது லிஸ்ட்​டில் டிக் அடித்து வைத்​திருக்​கி​றார். கடந்த மாதம் முதுகுளத்​தூருக்கு வந்​திருந்த தினகரன், தேர்​தல் பணி​களில் கவனம் செலுத்​தும்​படி அமமுக மாவட்​டச் செய​லா​ள​ரும் முதுகுளத்​தூரின் முன்​னாள் எம்​எல்​ஏ-வு​மான முரு​க​னுக்கு அறி​வுறுத்​திச் சென்​ற​தாகச் சொல்​கி​றார்​கள். தினகரனும் இப்​போது அதி​முக அங்​கம் வகிக்​கும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தால், முதுகுளத்​தூர் தொகுதி பாண்​டிய​னுக்கா முரு​க​னுக்கா என்​பது பழனி​சாமி​யின் கையில் தான் இருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x