Published : 09 Jun 2025 04:25 AM
Last Updated : 09 Jun 2025 04:25 AM

நார்வே செஸ் போட்டியில் 3-ம் இடம் பிடித்த குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நார்வே கிளாசிக்​கல் செஸ் போட்​டி​யில் 3-ம் இடம் பெற்ற குகேஷ்ஷுக்கு தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே.​வாசன் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட வாழ்த்து பகிர்​வில், “நார்வே கிளா சிக்​கல் செஸ் போட்​டி​யில் 14.5 புள்​ளி​களு​டன் மூன்​றாவது இடத்​தைப் பிடித்த குகேஷை நினைத்து பெரு​மைப்​படு​கிறோம். குறிப்​பிடத்​தக்க திறமை மற்​றும் உறு​தி​யுடன், இந்​தி​யா​வின் சதுரங்க எதிர்​காலத்​தின் அடை​யாள​மாக குகேஷ் தொடர்ந்து பிர​காசித்து வரு​கிறார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

தமிழ் மாநில காங்​கிரஸ் தலை​வர் ஜி.கே. வாசன்: இந்​தி​யா​வின் கிராண்ட் மாஸ்​டர் குகேஷ் நார்​வே​யில் நடை​பெற்ற செஸ் போட்​டி​யில் பங்​கேற்று மூன்​றாவது இடத்​தைப் பெற்​றிருப்​பது மகிழ்ச்​சிக்​குரியது. உலக சாம்​பிய​னாக இருக்​கும் தமிழகத்​தைச் சேர்ந்த குகேஷ் நார்வே கிளாசிக்​கல் செஸ் போட்​டி​யில் சாம்​பியன் பட்​டம் வெல்​வார் என்ற எதிர்​பார்ப்பு இருந்​தது.

இருப்​பினும் தனது திறமை​யால், அறி​வுக்​கூர்​மை​யால், கடின உழைப்​பால் 3-வது இடம் பிடித்​திருப்​ப​தால் இந்​தி​யர்​கள் பெருமை அடைகிறார்​கள். இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் துறை​யின் திறமையை உலக அரங்​கில் பரப்​புவ​தில் தமிழக விளை​யாட்டு வீரர் குகேஷ் அவர்​கள் ஆற்​றும் பங்கு போற்​று​தலுக்​குரியது. குகேஷ் தொடர்ந்து செஸ் போட்​டிகளில் பங்​கேற்க, வெற்றி பெற ஊக்​கமளிக்​கும் வகை​யில் மத்​திய அரசும், தமிழக அரசும் பரிசுகள் வழங்​கி, பா​ராட்​டி, துணை நிற்க வேண்​டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x