Published : 01 Jun 2025 12:49 PM
Last Updated : 01 Jun 2025 12:49 PM

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவராக நாகூர் ராஜா நியமனம்

எம்.நாகூர் ராஜா

இந்திய தேசிய லீக் மாநில தலைவராக எம்.நாகூர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய கவுன்சில் தேசிய பொதுச் செயலாளர் முஸம்மில் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக நிர்வாக குழு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதன்படி, புதிய மாநில தலைவராக எம்.நாகூர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணைத் தலைவர்களாக பஷீர் அகமது, முகம்மது இக்பால் பாஷா, பொதுச்செயலாளராக சையத் சதான் அகமது, பொருளாளராக முகம்மது ரஹமத் அலி, மாநில செயலாளர்களாக முகம்மது கான், புதுக்கோட்டை பென்ஸ் ஜாகீர், கோவை சீராஜூத்தீன், ஸ்டார் பாஷா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக குழுவில் 20 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு, கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x