Published : 31 May 2025 12:58 AM
Last Updated : 31 May 2025 12:58 AM
சென்னை: திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் 8 சதவீத கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட அமைப்புகள், தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.குறிப்பாக, சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த வரியால் பாதிக்கப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்பின் கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்த வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோருக்கு திரைப்படத் துறையினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT