Published : 05 May 2025 08:03 AM
Last Updated : 05 May 2025 08:03 AM

பேர வலிமை குறைந்தது... பேசமுடியாத நிலையில் திமுக கூட்டணி கட்சிகள்!

ஒருவழியாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள்.

சில வாரங்​களுக்கு முன்பு வரை தமி​ழ​கத்​தில் திமுக, அதி​முக, பாஜக, தவெக என சிறிய கட்​சிகளுக்கு 4 வித​மான கூட்​டணி வாய்ப்​பு​கள் இருந்​தன. அது இப்​போது திமுக கூட்​ட​ணி, அதி​முக கூட்​டணி என இரண்​டாக சுருங்​கி​விட்​டது. அதி​முக, தவெக ஆப்​ஷன்​கள் இருந்​தவரை திமுக கூட்​டணி கட்​சிகள் தங்​கள் பேர வலிமையை அதி​கப்​படுத்​தலாம் என்று கனவுக் கோட்டை கட்​டின. அதன் வெளிப்​பா​டாகவே தங்​களுக்கு குறைந்​தது 25 தொகு​தி​கள் வேண்​டும் என விசிக நிர்​வாகி​கள் பொதுத்​தளத்​தில் கோரிக்கை வைத்​தனர்.

சிபிஎம், சிபிஐ கட்​சிகளும் அவ்​வப்​போது ஆட்​சி​யின் குறை​பாடு​களை சுட்​டிக்​காட்டி அழுத்​தம் கொடுத்​தன. காங்​கிரஸ் தரப்​பிலும் கூடு​தல் தொகு​தி​கள், கூட்​டணி ஆட்சி போன்ற வார்த்தை தூண்​டில்​களை வீசிப் பார்த்​தனர். மதி​முக-​வும் மனதில் ஆசையோடு இருந்​தது. 2019 மக்​கள​வைத் தேர்​தல் முதலே திமுக கூட்​ட​ணிக்கு கைகொடுத்து வரும் விசிக, சிபிஎம், சிபிஐ, மதி​முக ஆகிய கட்​சிகளுக்கு 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் தலா 6 தொகு​தி​களை மட்​டுமே ஒதுக்​கியது திமுக. அதி​லும் மதி​முக, உதயசூரியன் சின்​னத்​திலேயே போட்​டி​யிட வலி​யுறுத்​தப்​பட்​டது.

விசிக-​வும் தனிச் சின்​னத்​தில் போட்​டி​யிட பெரிய போராட்​டமே நடத்​தி​யது. அப்​போதே மிகக்​குறை​வான தொகு​தி​களை பெற்​று​விட்​ட​தாக திமுக கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு மனக்​கு​முறல் இருந்​தது. அப்​போது, ‘மீண்​டும் அதி​முக - பாஜக அணி வெல்​லக்​கூ​டாது என்ற நோக்​கத்​துக்​காக பொறுத்​துக் கொள்​ளுங்​கள்’ என அவர்​களுக்கு சமா​தானம் சொல்​லப்​பட்​டது.

இந்த நிலை​யில், கடந்த ஒரு வருட​மாகவே 2026 தேர்​தலில் அதிக தொகு​தி​கள் வேண்​டும் என, அதி​முக ஆப்​ஷனைக் காரணம் காட்டி காய் நகர்த்த ஆரம்​பித்தன திமுக தோழமை கட்​சிகள். அந்​தக் கனவும் இப்​போது கலைந்து போய்​விட்​டது. பாஜக உடன் அதி​முக ஜோடி சேர்ந்​த​தால் திமுக கூட்​டணி கட்​சிகளுக்கு அதி​முக ஆப்​ஷன் இனி அறவே இல்​லை.

இன்​னொரு வாய்ப்​பென்​றால் அது தவெக தான், ஆனாலும், அரசி​யலுக்கு புதி​ய​வ​ரான விஜய்யை நம்பி ஆழம் பார்க்​கும் தைரி​யம் யாருக்​கும் இல்​லை. அதனால் இவர்​கள் முழுக்க முழுக்க திமுக கூட்​ட​ணி​யையே நம்பி இருக்​கவேண்​டிய சூழல் ஏற்​பட்​டு​விட்​டது. இதன் வெளிப்​பா​டாகவே, “கூட்​டணி தர்​மத்​துக்​காகவே பெரிய வாய்ப்​பு​களை தரு​வ​தாக சொன்ன அதி​முக, தவெக-​வின் கூட்​டணி அழைப்​பு​களை நிராகரித்​தேன்” என திரு​மாவளவன் பேசி வரு​கி​றார்.

கடந்த காலங்​களில் தேர்​தல் நெருக்​கம் வரை கூட்​டணி கணக்​கு​கள் மாறிக்​கொண்டே இருக்​கும். அதனால் சிறிய கட்​சிகள் பேர வலிமை​யின் மூலம் கூடு​தல் தொகு​தி​களை பெறும் சூழல் இருந்​தது. தற்​போது தேர்​தலுக்கு ஓராண்​டுக்கு முன்பே அதி​முக – பாஜக கூட்​டணி அமைந்​து​விட்​டது. இதனால், பாஜக-வை எதிர்க்​கும் கட்​சிகளால் அதி​முக பக்​கம் இனி செல்​லவே முடி​யாது. எனவே வழக்​கம் போல திமுக கொடுக்​கும் தொகு​தி​களை வாங்​கிக்​கொண்டு அமை​தி​யாக போக வேண்​டிய சூழலே இம்​முறை​யும் உரு​வாகி​யுள்​ளது.

அதி​முக - பாஜக கூட்​டணி ஆட்​சிக்கு வரு​வதை தடுக்க, கொடுக்​கும் தொகு​தி​களை வாங்​கிக் கொண்டு நில்​லுங்​கள் என இம்​முறை​யும் தோழமைக் கட்​சிகளுக்கு திமுக சமா​தானம் சொல்​லும்.ஜனநாயகத்​தில் பெரிய கட்​சிகளுக்கு நிக​ராக வெவ்​வேறு இலக்​கு​களை கொண்டு பயணிக்​கும் சிறிய கட்​சிகளும் முக்​கி​யம்​தான். இந்​தத் தேர்​தலில் அவர்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வத்தை பெரிய கட்​சிகள் வழங்​கு​மா, இல்லை ‘பெரியண்​ணன்’ மனப்​பான்​மை​யில் நடத்​துமா என பொறுத்​திருந்து பார்​ப்​போம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x