Published : 04 May 2025 12:51 AM
Last Updated : 04 May 2025 12:51 AM

மாநில உரிமைகளை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு’ என்ற பெயரில் சென்னையில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் செங்கோல் பரிசளிக்கப்பட்டது. உடன் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், ஆர்எம்கே கல்விக் குழும நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் உள்ளிட்டோர்.

சென்னை: மாநில உரிமை​களை எந்த காலத்​தி​லும் விட்​டுக்​கொடுக்க மாட்​டோம் என சென்​னை​யில் நடந்த பாராட்டு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட்டு வைத்​திருந்​ததை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்​கில், மசோ​தாக்​களுக்கு உச்ச நீதி​மன்​றமே அனு​ம​தி​யளித்​து, முக்​கிய தீர்ப்பை வழங்​கியது.

இதை முன்​னெடுத்த தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு கல்​வி​யாளர்​கள் சார்​பில் சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்​தான பாராட்​டு’ என்ற தலைப்​பில் நடந்த விழாவுக்கு வந்த முதல்​வர் ஸ்டா​லினுக்கு மேள​தாளம் முழங்க நடன நிகழ்ச்​சிகளு​டன் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

பின்​னர் நடை​பெற்ற இசை, கலை நிகழ்ச்​சிகளை முதல்​வர் கண்டு ரசித்​தார். பின்​னர் மேடையேறிய முதல்​வருக்கு பொன்​னாடை போர்த்​தி, நினைவு பரிசு, செங்​கோல் உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டன. விருந்​தினர்​களும் கவுரவிக்​கப்​பட்​டனர். சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் கூட்​டமைப்பு தலை​வரும், ஆர்​எம்கே கல்விக் குழும நிறுவன தலை​வரு​மான ஆர்​.எஸ்​.​முனிரத்​தினம் வரவேற்​புரை ஆற்​றி​னார். விழாவுக்கு திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி தலைமை வகித்​தார். உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோ​வி.செழியன் முன்​னிலை வகித்​தார்.

ஏற்​புரை நிகழ்த்தி முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: பாராட்டு விழா அழைப்​பிதழில் ‘சு​யாட்சி நாயகர்’ என்று நீங்​கள் குறிப்​பிட்​டிருப்​பது உண்​மை​யில் நான் அல்ல. அது தமிழக மக்​களைத்​தான் குறிக்​கிறது. திமுவுக்கு ஓட்டு போட்​டால் மு.க.ஸ்​டா​லின் அமைக்​கும் ஆட்சி சமூகநீதி ஆட்​சி​யாக, சமத்​துவ ஆட்​சி​யாக இருக்​கும். மாநில சுயாட்​சிக்​காக கூட்​டாட்​சிக்​காக இறு​திவரை அவர் போராடு​வார் என்ற நம்​பிக்​கையோடு வாக்​களித்த மக்​களுக்​குத்​தான் வெற்​றி.

பொது​வாக பாராட்டு விழா வுக்கு நான் ஒப்​புக்​கொள்​வது இல்​லை. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்​ப​தால் ஒப்​புக்​கொண்​டேன். இது முதல்​வர் ஸ்டா​லின், தமிழக மக்​களுக்​கு மட்​டுமின்​றி, இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநிலங்​கள், இந்​திய மக்​கள் அனை​வருக்​கும் உச்​சநீ​தி​மன்​றம் மூலம் தமிழகம் பெற்​றுத்​தந்​துள்ள வெற்​றி.

மத்​திய அரசு ஏஜென்ட்​டான ஆளுநர், மக்​களுக்​கான திட்​டங்​களை நிறுத்தி வைப்​ப​தென்​றால், முதல்​வர் எதற்​கு, மக்​கள் போடும் வாக்கு எதற்​கு, தேர்​தல் எதற்​கு. ஆளுநர் பதவி ரப்​பர் ஸ்டாம்ப் போன்​றது.

பல்​கலைக்​கழகங்​கள் அமைந்​துள்ள இடம் மாநில அரசுக்கு உரியது. அங்கு பணி​யாற்​றும் ஊழியர்​களுக்கு சம்​பளம் கொடுப்​பது, மாணவர்​களுக்கு தேவை​யான வசதி​களை செய்​வது மாநில அரசு. ஆனால், பல்​கலைக்​கழகநிர்​வாகத்தை கவனிக்​கும் துணைவேந்​தரை ஆளுநர் நியமிப்​பது எந்த வகை​யில் நியா​யம்.

அதனால்​தான் நீதி​மன்​றம் சென்​றோம். உச்ச நீதி​மன்​ற​மும் அரசி​யலமைப்பு வழி நின்று தெளி​வான தீர்ப்பை வழங்​கி​யுள்​ளது. பல ஆண்டு கால பிரச்​சினை​களுக்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது. பூனைக்கு மணி கட்​டப்​பட்​டுள்​ளது. ஆளுந​ரால் நிறுத்தி வைக்​கப்​பட்ட 10 மசோ​தாக்​களுக்கு உச்ச நீதி​மன்​றம் சிறப்பு அதி​காரத்தை பயன்​படுத்தி ஒப்​புதல் அளித்து தீர்ப்​பளித்​துள்​ளது. பிரதமருக்​குரிய உரிமையை குடியரசுத்தலை​வர் எடுத்​துக்​கொண்​டால் சும்மா இருப்​பார்​களா.

நாடாளு​மன்​றத்​துக்​குத்​தான் அதிக அதி​காரம் என்று குடியரசு துணை தலை​வர் சொல்​கிறார். நாங்​களும் அதைத்​தான் சொல்​கிறோம். மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் அதிக அதி​காரம். தனி​நபர் மரி​யாதை முக்​கி​யம். எந்த காலத்​தி​லும் மாநில உரிமை​களை விட்​டுத் தரமாட்​டோம். இது​தான் எனது கொள்​கை.

நாட்​டுக்கே முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ளது. உலகத்​துடன் போட்டி போட நம் இளைஞர்​கள் இன்​னும் வளர்ந்​தாக வேண்​டும். பகுத்​தறி​வுக்கு எதி​ரான, முட்​டாள்​தன​மான கட்​டுக்​கதைகள், மூடநம்​பிக்​கைகளை பரப்​பும் இடமாக கல்வி நிலை​யங்​கள் இருக்க கூடாது. கல்வி நிலை​யங்​களில் அறி​வியல் பூர்​வ​மான கருத்​துகள், சமூக நீதியை மட்​டுமே கற்​பிக்க வேண்​டும். இதற்கு மாறாக செயல்​பட்​டால் இந்த அரசின் எதிர்​வினை கடுமை​யாக இருக்​கும்.

மாணவர்​களை படிக்​க​விடக் கூடாது என தேசிய கல்விக் கொள்​கை, விஸ்​வகர்மா திட்​டம் என புதிது புதி​தாக பல திட்​டங்​களை கொண்டு வரு​கிறார்​கள். இன்​னொரு பக்​கம் சமூக வலை​தளங்​கள் மூலம் மாணவர்​கள் மத்​தி​யில் சாதிய உணர்வை தூண்​டும் பல சதி​கள் நடக்​கிறது. அடுத்த நூற்​றாண்​டுக்கு தேவை​யான கல்​வியை மாணவர்​களுக்கு தர கல்​வி​யாளர்​கள் உறு​தி​யேற்க வேண்​டும். எந்த தடை வந்​தா​லும் அதையெல்​லாம் முறியடித்து உங்​களை நாங்​கள் படிக்க வைப்​போம். நமக்​கான உரிமை​களை மீட்டு உங்​களை படிக்க வைப்​பது அரசின் கடமை. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

விழா​வில் பங்​கேற்ற அனை​வருக்​கும் முதல்​வரின் சுயசரிதை​யான ‘உங்​களில் ஒரு​வன்' நூல் வழங்​கப்​பட்​டது. விழா​வில், விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் ஜி.​விசுவ​நாதன், பாரத் பல்​கலைக்​கழக தலை​வர் எஸ்​.ஜெகத்​ரட்​சகன் எம்​.பி.உள்​ளிட்​டோர் மற்​றும் கல்​லூரி மாணவ, மாணவி​கள் முதல்​வரை பாராட்டி பேசினர். அருணை கல்விக்​குழும துணைத் தலை​வர் எ.வ.குமரன் உள்​ளிட்ட விழா குழு​வினர் மற்​றும் பல்​கலைக்​கழக தலைமை நிர்​வாகி​கள், கல்​வி​யாளர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​. விழா​வில்​, முதல்​வருக்​கு நன்​றி தெரிவிக்​கும்​ வகை​யில்​ மாணவர்​கள்​ அனை​வரும்​ செல்​போன்​ ​டார்​ச்​ லைட்​டை ஒளிரச்​ செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x