Last Updated : 03 May, 2025 09:28 AM

7  

Published : 03 May 2025 09:28 AM
Last Updated : 03 May 2025 09:28 AM

தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்! - கார்த்தி சிதம்பரத்தின் கனவு பலிக்குமா?

தமிழகத்தில் 1972-க்கு முன்பு வரைக்கும் காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை இருந்தது. 1972-ல் எம்ஜிஆர், அதிமுக-வை தொடங்கிய பிறகு களம் திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமான போட்டியாக மாறிப்போனது. அதன் பிறகு கடந்த 53 வருடங்களாக காங்கிரஸால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை.

அ​தி​முக-​வும் திமுக-​வும் தங்​கள் தலை​மை​யிலேயே கூட்​ட​ணி​களை கட்​டமைத்து வரு​கின்​றன. காங்​கிரஸ் அதில் பத்​தோடு பதினொன்​றாகத்​தான் ஒட்​டிக் கொள்​கிறது. இன்​றைக்கு வந்த அண்​ணா​மலை, நயினார், சீமான், நடிகர் விஜய் போன்​றவர்​களைக் கூட முதல்​வர் வேட்​பாளர் என தெம்​பாகச் சொல்​கின்றன அவர்​கள் சார்ந்​திருக்​கும் கட்​சிகள். ஆனால், ஒரு காலத்​தில் தமி​ழ​கத்தை ஆளும் கட்​சி​யாக இருந்த காங்​கிரஸுக்​கு, ‘இவர் தான் எங்​களின் முதல்​வர் வேட்​பாளர்’ என்று சொல்ல இப்​போது தன்​னம்​பிக்கை இல்​லாமல் போய்​விட்​டது.

ஊடகம் ஒன்​றுக்கு அளித்த பேட்டி ஒன்​றில் இந்​தக் கருத்தை தயக்​கமின்றி பேசி இருக்​கும் காங்​கிரஸ் எம்​பி-​யான கார்த்தி சிதம்​பரம், “தமிழக காங்​கிரஸுக்கு எதிர்​காலம் என்​பது பெரும் சவாலானது. தமிழக அரசி​யலில் கட்​சிகள் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இரு திரா​விட கட்​சிகளும் பலமாக உள்​ளது. திமுக, தொண்​டர்​கள் ரீதி​யாக அடிப்​படை கட்​டமைப்பை பலமாக வைத்​துள்​ளது.

அடுத்​தடுத்த தலை​முறைக்​கான இளம் தலை​வர்​களை அக்​கட்சி அறி​முகம் செய்து வரு​கிறது. அதை சீனியர்​களும் ஏற்​றுக் கொள்​கி​றார்​கள். இன்​னும் 25 ஆண்​டு​களுக்கு தேர்​தல் ரீதியி​லான பிரச்​சினை​களை எதிர்க்​கொண்டு திமுக நீடித்து நிற்​கும். அதே​போல் அதி​முக-வை​யும் குறைத்து மதிப்​பிட முடி​யாது. இந்​தக் கட்​சிக்​கும் கிராம அளவில் வலு​வான கட்​டமைப்பு இருக்​கிறது. அதனாலேயே அந்​தக் கட்​சி​யுடன் சேர்ந்து தமி​ழ​கத்​தில் காலூன்ற நினைக்​கிறது பாஜக.

இரு திரா​விட கட்​சிகளும் வேண்​டாம் என்ற தாக்​கம் இருந்​தா​லும் மக்​கள் எப்​போது முடி​வெடுக்​கப் போகி​றார்​களோ அப்​போது​தான் அது நிறை​வேறும். அண்​ணா​மலை வரு​கைக்கு பின் தமி​ழ​கத்​தில் பாஜக சற்று வளர்ந்​திருப்​ப​தாகவே பார்க்​கப்​படு​கிறது. ஆனால், மக்​களவை தேர்​தல் வரும்​போது, மட்​டுமே பேசும் கட்​சி​யாக காங்​கிரஸ் உள்​ளது. திமுக, அதி​முக, தவெக போன்ற கட்​சிகளில் ஒரு​வரை முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தும் போது காங்​கிரஸில் மட்​டும் அப்​படியொரு நிலை இல்​லையே என, மக்​கள் யோசிக்​கின்​ற​னர்.

கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும் மக்​கள் பிரச்​சினை​களைப் பற்றி பேசவேண்​டும். காங்​கிரஸ் அப்​படிப் பேசுவ​தில்லை என்ற குற்​றச்​சாட்டு உள்​ளது. தேசிய கட்​சி​யாக தனிப்​பட்ட கருத்​துகளை வெளிப்​படுத்​தவேண்​டும். நடை, உடை, பாவனையை மாற்றி தமி​ழ​கத்​தில் அரசி​யல் கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக காங்​கிரஸ் வளர​வேண்​டும்; வரவேண்​டும்” என்று மனதில் பட்​டதைப் பளிச்​சென சொல்லி இருக்​கி​றார்.

கார்த்​தி​யின் இந்​தக் கருத்​தானது காங்​கிரஸ் கட்​சிக்​குள்​ளேயே ஆதர​வை​யும் எதிர்ப்​பை​யும் கிளப்பி வரும் நிலை​யில், இதுகுறித்து நம்​மிடம் பேசிய காங்​கிரஸ் பொதுக்​குழு உறுப்​பினர் சிவகங்கை பழனியப்​பன், “தமி​ழ​கத்​தில் பாஜக வளர்ந்​திருந்​தா​லும் சிவகங்கை தொகு​தி​யில் தொடர்ந்து காங்​கிரஸ் தான் வெற்றி பெறுகிறது. கன்​னி​யாகுமரியை விட, சிவகங்கை மாவட்​டத்​தில் காங்​கிரஸ் வலு​வாக இருந்​தா​லும் இடை​யில் கொஞ்​சம் தொய்வு ஏற்​பட்​டது. அதற்​காக தொண்​டர்​களை உற்​சாகப்​படுத்த கார்த்தி சிதம்​பரம் அப்​படிப் பேசி​யிருக்​கலாம். தமிழக காங்​கிரஸ் தலை​வர் பதவியை எதிர்​பார்த்​திருக்​கும் கார்த்​தி, அதற்​காக​வும் அப்​படிப் பேசி இருக்​கலாம்.

கட்​சி​யிலுள்ள இளைஞர்​களை உற்​சாகப்​படுத்​தும் நோக்​கில் பாஜக வளர்ந்​திருக்​கிறது; நாமும் வளர​வேண்​டும் என, கார்த்தி சிதம்​பரம் பேசி இருப்​ப​தாகவே நான் பார்க்​கிறேன். ஆனால், காங்​கிரஸ் கட்​சி​யின் வளர்ச்​சிக்கு உற்​சாகம் மிகுந்த மாநில தலைமை வேண்​டும். சிறு பிரச்​சினை​யாக இருந்​தா​லும் தொண்​டர்​கள் போன் செய்​தால் தலை​வர், நிர்​வாகி​கள் எடுத்​துப் பேசி என்ன ஏதென்று கேட்க வேண்​டும்.

ஆனால், காங்​கிரஸ் நிர்​வாகி​களில் பலரும் இரவு 9 மணிக்கு மேல் செல்​போனை அணைத்து வைத்​து​விடு​கி​றார்​கள். இப்​படி இருந்​தால் தொண்​டர்​களுக்கு எப்​படி உற்​சாகம் வரும்? அதே​போல், பொதுப்​பிரச்​சினை​களுக்​காக பொது​மக்​கள் அழைத்​தால் உடனே நாம் அங்கு செல்​ல​வேண்​டும். அதி​காரி​களிடம் முறை​யிட வேண்​டும். மற்ற கட்​சி​யினர் செய்​வதை நாமும் செய்​ய​வேண்​டும் என மக்​கள் எதிர்​பார்க்​கி​றார்​கள். இதையெல்​லாம் மனதில் வைத்தே கார்த்தி சிதம்​பரம் அப்​படிப் பேசி இருப்​பார்” என்​றார்.

கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சி​யாக தமி​ழ​கத்​தில் காங்​கிரஸ் தன்னை வளர்த்​துக் கொள்ள வேண்​டும் என நினைக்​கி​றார் கார்த்தி சிதம்​பரம். ஆனால், மாநில தலை​வரை மாற்ற வேண்​டும் என டெல்​லிக்கு மனு போட்​டுக் கொண்​டிருக்​கி​றார்​கள் இங்​குள்ள காங்​கிரஸ் மாவட்ட தலைவர்​கள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x