Last Updated : 30 Apr, 2025 07:53 AM

 

Published : 30 Apr 2025 07:53 AM
Last Updated : 30 Apr 2025 07:53 AM

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்தி எங்களுக்கு! - இப்போதே கணக்குப் போட்டு காய்நகர்த்தும் காங்கிரஸ்

பிரதானக் கட்சிகளின் தலைமைகள் எல்லாம் 2026 தேர்தலுக்கான கூட்டணிகளை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தோதான தொகுதிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில், மதுரை மாவட்​டத்​தி​லுள்ள 10 சட்டமன்றத் தொகுதி​களில் குறைந்​த​பட்சம் ஒரு தொகுதியை கூட்டணித் தலைமை​யிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறுவது வழக்கம். அதன்படி கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்​கியது திமுக. கடந்த முறை காங்கிரஸுக்கு மொத்தம் 25 தொகுதிகளை ஒதுக்​கியது திமுக.

இதில் தென் மாவட்​டங்​களில் மட்டுமே மேலூர், ஸ்ரீவில்​லிபுத்​தூர், திருவா​டானை, காரைக்​குடி, நாங்குநேரி, குளச்சல், விளவங்​கோடு, கிள்ளியூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, சிவகாசி, ஆகிய 11 தொகுதி​களில் காங்கிரஸ் போட்டி​யிட்டது. இதில் மேலூர், ஸ்ரீவில்​லிபுத்​தூரைத் தவிர மற்ற 9 தொகுதி​களிலும் வெற்றி​பெற்றது.

இந்த நிலையில், இம்முறை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியான மேலூரை தவிர்த்​து​விட்டு மதுரை நகருக்குள் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் இப்போதே காய்நகர்த்தலை தொடங்​கி​விட்​டனர்.

இதுகுறித்து பேசிய மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் பொறுப்​பாளரும் பொதுக்குழு உறுப்​பினருமான சையது பாபு, “2016-ல் மதுரை வடக்கு தொகுதியில் தற்போதைய மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்​தி​கேயன் வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தி​யாசத்தில் தான் அதிமுக-​விடம் தோற்றார். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் 1984 தொடங்கி 2001 வரை காங்கிரஸும் தமாகா-வும் தலா இரண்டு முறை வென்றுள்ளன. ஆக, மதுரை மத்தியும் எங்களுக்கு சாதகமான தொகுதி​தான்.

தற்போது மதுரை வடக்கில் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளப​தி​யும், மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜனும் எம்எல்​ஏ-க்களாக இருக்​கி​றார்கள். மதுரை மேற்கில் இம்முறை செல்லூர் ராஜூவை தோற்கடிக்க அமைச்சர் மூர்த்​திக்கு திமுக தலைமை ஸ்பெஷல் அசைன்​மென்ட் கொடுத்​திருப்பதாக தெரிகிறது. அதனால், ஏற்கெனவே மேற்கில் போட்டி​யிட்ட அனுபவம் உள்ள தளபதியை அந்தத் தொகுதியில் செல்லூர் ராஜூவை எதிர்த்து திமுக நிறுத்​தலாம் என்ற பேச்சு இருக்​கிறது. அப்படி நடந்தால் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸுக்காக கேட்போம்.

சையது பாபு

அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்​தாலும் அவர் மாநில அரசியலை விட்டு விலகி டெல்லி அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக ஒரு பேச்சு அடிபடு​கிறது. சிறிது காலம் அவர் அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கப் போவதாகவும் ஒரு சிலர் சொல்கி​றார்கள். அப்படி அவர் மத்திய தொகுதியில் போட்டி​யி​டாமல் ஒதுங்​கினால் மதுரை மத்தியை காங்கிரஸ் கட்சி கட்டாயம் கேட்டுப் பெற்று மீண்டும் அங்கு வென்று காட்டும்” என்றார்.

இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி திமுக நிர்வாகி​களிடம் பேசிய​போது, “யார் சொன்னது... அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் மீண்டும் மதுரை மத்தியில் போட்டி​யிட்டு அமைச்​ச​ராவது உறுதி. அதற்காகத்தான் தொடர்ச்​சியாக தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகி​றார். தொகுதி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்தி வருகி​றார்.

அமைச்சர் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டி​யிடப் போவதில்லை என்று சொல்வதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. இது அவரது காதுக்கும் வந்தது; சிரித்​துக்​கொண்டே கடந்து​விட்​டார். தலைமை அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்​கிறது. அவர் டெல்லி அரசியலுக்கு போகப் போவதாகச் சொல்வதும் அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக பரப்பும் வதந்திகளே” என்றனர்.

சீட் வாங்​கு​வது இருக்​கட்​டும்​... கலகலப்​புக்​கு பேர்​போன காங்​கிரஸார்​ ஒற்​றுமை​யாக இருந்​து கை சின்​னத்​தை ஜெ​யிக்​கவைப்​பார்​களா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x