Last Updated : 29 Apr, 2025 07:34 AM

14  

Published : 29 Apr 2025 07:34 AM
Last Updated : 29 Apr 2025 07:34 AM

தலைக்கு ஒரு பிரியாணி... இலைக்கு ஒரு பீர்..! - திமுக இளைஞரணிக்கு இப்படியும் ஒரு ‘விருந்து’!

கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு பிரியாணியுடன் குவாட்டரை மறைத்துக் கொடுத்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது போலிருக்கிறது. அதனால் தான் திருக்கோவிலூரில் பிரியாணி விருந்துடன் பீர் பாட்டிலையும் பந்தியிலேயே பகிரங்கமாக பரிமாறி பகீர் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப் புரட்சியை செய்திருப்பது, “போதையை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் என்பது இன்னுமோர் ‘சிறப்பு’.

கள்​ளக்​குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்​பில் திருக்​கோ​விலூர் மேற்​கு, கிழக்​கு, வடக்கு ஒன்​றி​யங்​களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்​பாளர்​கள் மற்​றும் துணை அமைப்​பாளர்​களுக்​கான ஆய்​வுக் கூட்​டம் 27-ம் தேதி நடை​பெற்​றது. ரிஷிவந்​தி​யம் தொகு​திக்​குட்​பட்ட திருக்​கோ​விலூர் மேற்கு ஒன்​றிய செய​லா​ளர் ஐயனார், கிழக்கு ஒன்​றிய செய​லா​ளர் ராஜேந்​திரன், வடக்கு ஒன்​றிய செய​லா​ளர் பூமாரி கிருஷ்ண​மூர்த்தி ஆகி​யோர் இந்​தக் கூட்​டத்தை ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள்.

திருக்​கோ​விலூரை அடுத்த சந்​தைப்​பேட்டை பகு​தி​யில் தனி​யார் திருமண மண்​டபத்​தில் மதிய உணவு சகிதம் தடபுடலாக நடந்த இந்த ஆய்​வுக் கூட்​டத்​தில் ரிஷிவந்​தி​யம் எம்​எல்​ஏ-​வும், கள்​ளக்​குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரு​மான வசந்​தம் கார்த்​தி​கேயன், ரிஷிவந்​தி​யம் தொகுதி தேர்​தல் பொறுப்​பாளர் பெருநற்​கிள்ளி ஆகி​யோர் கலந்​து​கொண்டு இளைஞரணி​யினர் வாக்​குச் சாவடிகளில் செயல்பட வேண்​டிய விதம் குறித்​தும், சமூகவலை​தளங்​களில் வரும் தகவல்​களின் உண்​மைத் தன்மை அறிந்து அதற்கு பதிலளிப்​பது குறித்​தும் வகுப்​பெடுத்​தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்​தக் கூட்​டத்​தில் சுமார் முந்​நூற்​றுக்​கும் அதி​க​மான​வர்​கள் கலந்து கொண்​டனர்.

கூட்​டம் முடிந்​ததும் மாவட்​டச் செய​லா​ளர் வசந்​தம் கார்த்​தி​கேய​னும் தொகுதி தேர்​தல் பொறுப்​பாள​ரும் அங்​கிருந்து சென்​று​விட்​டனர். அதன் பிறகு, கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட அத்​தனை பேருக்​கும் மணக்க மணக்க பிரி​யாணி விருந்து பரி​மாறப்​பட்​டது. அது​வரை எல்​லாம் சரி​யாகவே சென்று கொண்​டிருந்த நிலை​யில், அடுத்​த​தாகத்​தான் அந்த ‘அரங்​கேற்​றம்’ நடந்​தது. பிரி​யாணிக்​காக இலை​யைப் போட்​ட​வர்​கள், தண்​ணீர் பாட்​டில் வைக்​கும் முன்​பாகவே இலை​யின் ஓரத்​தில் பீர் பாட்​டில்​களை ‘இலைக்கு ஒன்​றாக’ வரிசை​யாக வைத்து அதிரச் செய்​தனர்.

வசந்​தம் கார்த்​தி​கேயன்

இதைப் பார்த்த இளைஞரணி​யினர் பலரும் உற்​சாக மூடில் பந்​தி​யில் அமர்ந்​து, ஒரு கையில் பீர் பாட்​டிலும் மறு கையில் பிரி​யாணி​யு​மாக காட்​சி​யளித்​தனர். இதை சிலர் செல்ஃபி எடுத்​தும் வாட்ஸ் அப்​பிலும் சோஷியல் மீடி​யா​விலும் வைரலாக்​கினர். திமுக நிகழ்ச்​சி​யில் இளைஞரணி​யினருக்கு இப்​படி பீர் பாட்​டிலுடன் பிரி​யாணி விருந்து வைத்த வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானதை அடுத்​து, ‘போதைக்கு எதி​ராக​வும் மது ஒழிப்பை ஆதரித்​தும் திமுக தலைமை பேசி வரும் நிலை​யில், அக்​கட்​சி​யின் நிர்​வாகி​களே இப்​படி மது கலாசா​ரத்தை ஊக்​குவிக்​கலாமா?’ என பலரும் சமூகவலை​தளங்​களில் வாள்​வீச ஆரம்​பித்​தார்​கள்.

10 மாதங்​களுக்கு முன்பு நடந்த கள்​ளக்​குறிச்சி கள்​ளச்​சா​ராய சாவு​களின் ரணங்​கள் இன்​னும் முற்​றாக ஆறாத நிலை​யில், அதே மாவட்​டத்​தில் திமுக-​வினர் வைத்த இந்த பீர் - பிரி​யாணி விருந்து கடும் விமர்​சனத்​துக்கு உள்​ளாகி இருக்​கும் நிலை​யில், இதுகுறித்து கருத்​தறிய ரிஷிவந்​தி​யம் எம்​எல்​ஏ-​வும் கள்​ளக்​குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரு​மான வசந்​தம் கார்த்​திக்​கேயனை தொடர்பு கொண்​டோம். போனை எடுத்​துப் பேசிய அவரது உதவி​யாளர் சதீஷ், எம்​எல்ஏ சட்​டப் பேரவை கூட்​டத்​தில் இருப்​ப​தாக தெரி​வித்​தார்.

இதையடுத்து கூட்ட ஏற்​பாட்​டாளர்​களில் ஒரு​வ​ரான திருக்​கோ​விலூர் வடக்கு ஒன்​றிய திமுக செய​லா​ளர் பூமாரி கிருஷ்ண​மூர்த்​தி​யிடம் பேசினோம். “சார், கூட்​டம் முடிந்​ததும் விருந்​துக்கு ஏற்​பாடு செய்​து​விட்டு நாங்க மற்​றொரு நிகழ்ச்​சிக்​காக மணலூர்​பேட்டை சென்​று​விட்​டோம். அப்​போது விருந்துக் கூடத்​தில் சமையல் பணி​யில் ஈடு​பட்​டிருந்த சிலர் பீர் பாட்​டிலை வாங்​கிவந்து அருந்​தி​யுள்​ளனர். மற்​றபடி நாங்​கள் யாருக்​கும் எந்த மது​வும் வாங்​கிக் கொடுக்​க​வில்​லை” என பவ்​ய​மாகப் பேசி​விட்டு இணைப்​பைத் துண்​டித்​துக் கொண்​டார்.

போதை​யின் பாதை​யில் செல்​லாதீர்​கள் என இளைஞர்​களை மன்​றாடிக் கேட்​டுக் கொண்டு வரு​கி​றார் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். அவரது கட்​சி​யினரோ இளைஞரணி கூட்​டத்​தில் இப்படி பீர் விருந்து வைத்து அவரது தூக்​கத்​தைப் பறித்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x