Last Updated : 19 Apr, 2025 09:15 AM

2  

Published : 19 Apr 2025 09:15 AM
Last Updated : 19 Apr 2025 09:15 AM

என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு? - எங்கே இருக்கிறார்... என்ன செய்கிறார்..?

‘பெல் பிரதர்ஸ்’ என பத்திரிகைகள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் பி.தங்கமணியும் இணை பிரியாமல் இருந்தவர்கள். என்ன காரணமோ தெரியவில்லை, அண்மைக்காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கும் போது கூட தங்கமணி தலையை பார்க்கமுடிவதில்லை.

என்​ன​தான் ஆச்சு தங்க​மணிக்​கு? பாஜக-வுடன் கூட்​டணி இல்​லவே இல்லை என்று பழனி​சாமி சொல்லி வந்​தா​லும், “நமக்கு பாது​காப்பே பாஜக தான். பாஜக கூட்​டணி தான் சரிப்​பட்டு வரும்” எனச் சொல்லி வந்​தார் தங்க​மணி என்​பார்​கள். பழனி​சாமிக்கு ஒரு​வகை​யில் சம்​பந்தி முறை என்​ப​தால் மற்றவர்​களைக் காட்​டிலும் கட்சி விவ​காரங்​கள் தங்க​மணிக்கு கொஞ்​சம் கூடு​தலாகவே தெரி​யும். இருந்த போதும், பாஜக கூட்​டணி விவ​காரத்​தில் தங்க​மணி​யின் பேச்​சும் பழனி​சாமி​யிடம் எடு​பட​வில்​லை. இதனால், அவராகவே கட்சி நடவடிக்​கை​களை விட்டு கொஞ்​சம் ஒதுங்கி இருந்​தார்.

அந்த நேரம் பார்த்து செங்​கோட்​டையனை வைத்து பாஜக தனி​யாக ஒரு டிராக் எடுத்​தது. இதை​வைத்​து, தங்க​மணி​தான் செங்​கோட்​டைய​னுக்கு பின்​னால் இருந்து இயக்​கு​கி​றார் என அவரது அரசி​யல் எதிரி​கள் சம்​பந்​தி​களுக்கு இடையே சங்​கடத்தை உண்​டாக்க சமயம் பார்த்து கொளுத்​திப் போட்​டார்​கள்.

இப்​படி தன்​னைச் சுற்றி இருப்​பவர்​கள் எல்​லாம் பாஜக கூட்​ட​ணியை வலி​யுறுத்​திய நிலை​யில், வேறு வழி​யில்​லாமல் பழனி​சாமி​யும் தனது முடிவை மாற்​றிக் கொண்டு பாஜக கூட்​ட​ணிக்கு சம்​மதம் தெரி​வித்​தார். இதற்​கான அறி​விப்பை அமித் ஷா வெளி​யிட்ட அந்த நிகழ்​வில் கூட வேலுமணி​தான் பழனி​சாமிக்கு பக்​கத்​தில் இருந்​தார். ஆனால், இந்​தக் கூட்​ட​ணிக்கு படி எடுத்​துக்​கொடுத்த தங்க​மணி அங்கேயும் மிஸ்​ஸிங்.

இதுதொடர்​பாக நம்​மிடம் பேசிய கொங்கு மண்டல அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர், “2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வேட்​பாளர்​களை தேர்வு செய்​வது தொடர்​பாக பழனி​சாமி​யின் மகன் மிதுன் தலை​மை​யில் சர்வே நடக்​கிறது. இதைத் தவிர இன்​னும் சில முக்​கிய​மான பொறுப்​பு​களை முடிக்​கும் பொறுப்பை மகன் வசம் ஒப்​படைத்​திருக்​கி​றார் பழனி​சாமி. இதில் ஏற்​பட்ட அதிருப்​தி​யின் காரண​மாக தங்க​மணி தானாக ஒதுங்​கி​யிருக்​கலாம்.

கடந்த பிப்​ர​வரி​யில், அம்மா பிறந்த நாளை முன்​னிட்டு சென்​னை​யில் அதி​முக நடத்​திய பேரணி​யில்​கூட தங்க​மணி கலந்து கொள்​ள​வில்​லை. உறவினர் வீட்டு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கச் சென்​றிருப்​ப​தாக அப்​போது தகவல் சொன்​னார்​கள். என்ன நிகழ்ச்சி இருந்​தா​லும் அம்மா பிறந்த நாள் பேரணியை புறக்​கணித்​திருக்க மாட்​டார் தங்க​மணி. ஆனால், ஏனோ அவர் கலந்​து​கொள்​ள​வில்​லை.

டாஸ்​மாக் ஊழல் தொடர்​பாக அமலாக்​கத் துறை தற்​போது விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதற்​காக பதி​வான வழக்​கு​களில் 30 வழக்​கு​கள் அதி​முக காலத்​தில் மாநில லஞ்ச ஒழிப்​புத் துறை​யின​ரால் பதி​யப்​பட்​ட​வை. அந்த நேரத்​தில் மின்​சா​ரம் மற்​றும் மது​விலக்கு ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​ச​ராக இருந்​தவர் தங்க​மணி.

இந்த நிலை​யில், இப்​போது அமலாக்​கத்​துறை விசா​ரணை நடத்​து​வ​தால் தனது தலைக்​கும் கத்தி வருமோ என நினைத்​திருக்​கலாம் தங்க​மணி. அதனாலும் அவர் கட்​சி​யின் முக்​கிய நிகழ்​வு​களில் தலைக்​காட்​டா​மல் அமை​தி​காக்​கலாம். அத்​துடன், உடல் நலமும் முன்​னைப் போல் இல்​லாத​தா​லும் கூட்​டம் அதி​கம் கூடும் இடங்​களுக்​குச் செல்​வதை அவர் தவிர்த்து வரு​கி​றார்” என்​றார்.

தங்க​மணிக்கு நெருக்​க​மான​வர்​களோ, “எடப்​பாடி பழனி​சாமிக்​கும், தங்க​மணிக்​கும் இடை​யில் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை.
அண்​மை​யில் கூட இரு​வ​ரும் ஒன்​றாகத்​தான் ஃப்​ளைட்​டில் சென்​னைக்​குப் புறப்​பட்​டுப் போனார்​கள். கட்சி விவ​காரம் தொடர்​பாக விவா​திக்க எடப்​பாடி​யார் வீட்​டுக்கு தங்க​மணி அடிக்​கடி செல்​வார். கூட்​டணி அறி​விப்​பின் போது மூத்த நிர்​வாகி​கள் இருந்​தால் போதும் என நினைத்​துக்​கூட அவர் போகாமல் இருந்​திருக்​கலாம். மற்​றபடி மிதுனின் தலை​யீடு​கள் காரண​மாகவெல்​லாம் தங்க​மணி ஒதுங்கி இருக்​க​வில்​லை. அது​வுமில்​லாமல், மாவட்​டத்​துக்​குள் நடக்​கும் கட்சி நிகழ்ச்​சிகளில் அவர் தவறாமல் கலந்​து​கொண்​டு​தான் வரு​கி​றார்” என்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், அண்​மை​யில் நாமக்​கல் அருகே நடை​பெற்ற அதி​முக நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற தங்க​மணி செய்​தி​யாளர்களிடம் பேசுகை​யில், “அதி​முக - பாஜக கூட்​டணி அறிவிக்​கப்பட்​டுள்​ளது. இதை தமி​ழ​கம் முழு​வதும் வரவேற்​றுள்​ளார்​கள். 2026-ல் எடப்​பாடி பழனி​சாமி முதல்​வர் ஆவார்” என்று மட்​டும் சொல்​லி​விட்டு காரில் ஏறி​னார். முன்​பெல்​லாம் அதி​முக-​வில் ஒன்​மேன் ஷோ கணக்​காக ஜெயலலிதா மட்​டுமே பேசப்​படும் நபராக இருப்​பார். இப்​போது சீசனுக்கு ஒரு​வர் என அத்​தனை பேரும் பேசப்​படுகிறார்​கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x