Published : 19 Apr 2025 06:39 AM
Last Updated : 19 Apr 2025 06:39 AM

பழநி கோயில் நிதியிலிருந்து ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி கட்ட தடை கோரி வழக்கு

சென்னை: பழநி கோயில் நிதி​யில் ரூ.20 கோடி செல​விட்டு ஒட்​டன்​சத்​திரத்​தில் கல்​லூரி கட்ட தடை விதிக்​கக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் நிதி​யில் இருந்து தொப்​பம்​பட்​டி​யில் கட்​டப்​பட்​டுள்ள கல்​லூரியை, ஒட்​டன்​சத்​திரம் அருகே மாற்​றி, பழநி கோயில் நிதியி​லிருந்து ரூ.20 கோடிக்கு மேல் செல​விட்டு நிரந்​தரக் கட்​டிடம் கட்​ட எதிர்ப்​புத் தெரி​வித்​தும், கட்​டு​மான பணி​களுக்கு தடை விதிக்​கக் கோரி​யும் டி.ஆர்​.ரமேஷ் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ் கு​மார், எஸ்​.செளந்​தர் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் அறநிலை​யத் துறை சார்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் அருண் நடராஜனிடம், “அரசுப் பணத்​தில் கல்​லூரி கட்​டு​வ​தாக இருந்​தால் எந்த ஆட்​சேப​மும் இல்​லை. ஆனால், கோயில் நிதி​யில் இவ்​வளவு பெரிய தொகையை எப்​படி எடுக்க முடி​யும்?” என்று கேள்வி எழுப்​பினர். அதற்கு அவர் “தற்​போது டெண்​டர் மட்​டுமே கோரப்​பட்​டுள்​ளது” என்​றார்.

அப்​போது மனு​தா​ர​ரான டி.ஆர்​. ரமேஷ், “தொப்​பம்​பட்​டிக்​குப் பதிலாக வேறு இடத்​துக்கு கல்​லூரியை மாற்ற அறநிலை​யத் துறைச் செயலருக்கு எந்த அதி​கார​மும் இல்​லை. உயர் கல்​வித்துறைச் செயலர்​தான் உத்​தரவு பிறப்​பிக்க முடி​யும். புதி​தாக இடமாற்​றம் செய்​யப்​பட​வுள்ள இடத்​தில் அஸ்​தி​வாரமே போட்​டு​விட்​டனர். தண்​ணீர் பந்​தல் தருமத்​துக்​காக வழங்​கப்​பட்ட நிலத்தை பழநி உபகோ​யில் என்று கூறி, புதி​தாக கல்​லூரியை கட்டி வரு​கின்​றனர். இது சட்​ட​விரோதம்” என்​றார்.

அரசு வழக்​கறிஞர் அருண் நடராஜன், “கல்​லூரி தொடங்க அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. 2021-ல் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த இடைக்​கால உத்​தர​வுப்​படியே பழநி தொப்​பம்​பட்டி உள்​ளிட்ட 4 இடங்​களில் கல்​லூரி​கள் தொடங்​கப்பட்​டு, கடந்த 3 ஆண்​டு​களாக செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றுக்கு நிரந்​தரக் கட்​டிடங்​களும் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. இந்த சூழலில், பணி​களுக்கு தடை விதிக்​கக்​கூ​டாது” என்​றார். இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “இந்த விவ​காரத்​தில் தற்​போது எந்த இடைக்​கால உத்​தர​வும் பிறப்​பிக்க முடி​யாது” என்று தெரி​வித்​து, வி​சா​ரணை​யை ஜூன்​ 5-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x