Published : 19 Apr 2025 05:09 AM
Last Updated : 19 Apr 2025 05:09 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து: குடியரசு துணை தலைவருக்கு முதல்வர், அரசி​யல் கட்​சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: உச்ச நீதி​மன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கரின் கருத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்​சித்தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். எத்​தகைய உயர் பொறுப்​பில் இருப்​பவ​ரா​னாலும் அவர் சட்​டத்​துக்​குக் கட்​டுப்​பட்​டுத்​தான் நடக்க வேண்​டும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யலமைப்​புச் சட்​டத்தை நாம் ஏற்​றுக்​கொண்டு 75 ஆண்​டு​கள் கடந்​து​விட்​டன. எதிர்க்​கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்​து, பொதுக் கருத்​தாடலில் வலது​சா​ரிக் கருத்​துகளைத் திணிக்க முற்​படும் தற்​போதைய தீங்​கானது ஆளுநர்​கள், குடியரசுத் துணைத் தலை​வர், அவ்​வளவு ஏன் குடியரசுத் தலை​வர் உட்பட அரசி​யலமைப்​புப் பதவி​களை அரசி​யல் நோக்​கங்​களுக்​குப் பயன்​படுத்​து​வ​தில் இருந்து முளைத்த ஒன்​றாகும்.

மக்​களாட்​சி​யில், மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள்​தான் அரசை நடத்த வேண்​டும், அலங்​கார நியமனப் பதவி​களில் அமர்ந்​திருப்​பவர்​கள் அல்ல. எந்​தத் தனி நபரும், அது எத்​தகைய உயர் பொறுப்​பில் இருப்​பவ​ரா​னாலும் அவர் சட்​டத்​துக்​குக் கட்​டுப்​பட்​டுத்​தான் நடக்க வேண்​டும். இதைத்​தான் உச்ச நீதி​மன்​றம் சுட்​டிக்​காட்​டி​யிருக்​கிறது.

வரலாற்​றுச் சிறப்​புமிக்க அத்​தீர்ப்பு தவறான வழி​முறையைச் சரிசெய்​யும் நகர்​வாகும். ஆகவே, இந்த வரவேற்​கத்​தகுந்த சீர்​திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்​தி​களை நிலைகுலைய வைத்​துள்​ளதைப் புரிந்​து​கொள்ள முடிகிறது. தற்​போதைய தேவை என்​பது, இந்​தச் சீர்​திருத்​தம் முழு​மை​யாக நடை​முறைத்​தப்​படு​வதை உறு​தி​செய்​வதே.

திமுக துனை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி.: ஆளுநர்​கள் மற்​றும் குடியரசுத் தலை​வர்​களின் பங்கு என்ன என்​பது குறித்து உச்ச நீதி​மன்​றம் அரசி​யலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்​படுத்தி சமீபத்​தில் தெளிவு படுத்தி உள்​ளது. அதில் அரசி​யலமைப்பு அதி​காரம் என்ற பெயரில் எந்​தவொரு தனி​நபரும் சட்​டப்​பேர​வை​யால் நிறைவேற்​றப்​பட்ட மசோ​தாக்​களை கால​வரை​யின்றி நிறுத்தி வைக்க முடி​யாது என்​பதை சந்​தேகத்​துக்கு இடமின்றி நிறு​வி​யுள்​ளது. இந்த உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலை​வர் ஜெக​தீப் தன்​கரின் கருத்​துகள் நெறி​முறையற்​றவை.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரசமைப்​புச் சட்​டத்​துக்கு விரோத​மாக​வும், ஒட்​டுமொத்த தமிழக மக்​களின் உரிமை​களுக்கு எதி​ராக​வும் பேசிய குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கரை தமிழகமே இன்று வன்​மை​யாகக் கண்​டிக்​கின்​றது, எச்​சரிக்​கிறது. நீதி​மன்​றத்தை அச்​சுறுத்​தும் அவரது பேச்சை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன்: தமிழக ஆளுநரின் சட்​ட​விரோத செயல்​களுக்​கு, குடியரசுத் தலை​வர் மவுன சாட்​சி​யாக இருந்து விடக் கூடாது என்ற நல்​லெண்​ணத்​தில் குடியரசுத் தலை​வரின் அரசி​யல் சாசன கடமை​களை நினை​வூட்​டி, அவை​களை நிறைவேற்ற கால வரம்பு நிர்​ண​யித்​திருப்​பது அரசி​யலமைப்பு பாது​காப்​புக்​கான அரணாகவே அமைந்​திருக்​கிறது என்​பதை குடியரசுத் துணைத் தலை​வர் பிடி​வாத​மாக நிராகரித்து விட்​டு, உச்ச நீதி​மன்​றத்​துக்​கும், நீதித்​துறைக்​கும் எதி​ராகப் பேசி​யிருப்​பதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x