Last Updated : 18 Apr, 2025 09:40 AM

1  

Published : 18 Apr 2025 09:40 AM
Last Updated : 18 Apr 2025 09:40 AM

‘பாஜக கூட்டணியால் எங்களுக்குப் பலனில்லை!’ - புலம்பும் புதுச்சேரி அதிமுக

2021-ல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வென்று அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை ஒதுக்கிவிட்டு தனித்துக் களம் கண்ட அதிமுக, மூன்றாமிடத்துக்குப் போனது. பாஜக-வை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த நிலையில், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என புதுச்சேரி அதிமுக-வும் இத்தனை நாளும் வலியுறுத்தி வந்தது.

இந்​நிலை​யில், தமி​ழ​கத்​தில் மீண்​டும் பாஜக-வுடன் கை கோத்து தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இடம்​பிடித்​திருக்​கிறது அதி​முக. பாஜக தயவுடன் புதுச்​சேரியை ஆளும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் தலை​வர் ரங்​க​சாமி, தற்​போது பாஜக-வுடன் அத்​தனை சுமுக​மான நட்​புற​வில் இல்​லை. அதேசம​யம், நடிகர் விஜய்​யுடன் நட்பு பாராட்​டும் அவர், அண்​மை​யில் தமிழக முதல்​வர் ஸ்டா​லினை​யும் சட்​டப் பேர​வை​யிலேயே புகழ்ந்து தள்​ளி​னார். தங்​களுக்​குப் பிடிக்​காத திமுக மற்​றும் தவெக-வை ரங்​க​சாமி நேசப் பார்வை பார்ப்​பது பாஜக வட்​டாரத்தை பல்​லைக் கடிக்க வைத்​திருக்​கிறது. ஆனபோதும் புதுச்​சேரி பாஜக தலை​வர்​கள், “என்​.ஆர்​.​காங்​கிரஸுடன் தான் கூட்​ட​ணி” என அழுத்​த​மாகச் சொல்லி வரு​கி​றார்​கள்.

இதுகுறித்து பாஜக-வைச் சேர்ந்த் பேர​வைத் தலை​வர் செல்​வத்​திடம் கேட்​டதற்​கு, “புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி தொடர்ந்து நீடிக்​கும். இதில் எவ்​வித மாற்​ற​மும் இல்​லை. 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மீண்​டும் முதல்​வர் வேட்​பாள​ராக ரங்​க​சாமி நிறுத்​தப்​படு​வார்; வெற்றி பெறு​வார். மீண்​டும் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமைக்​கும்” என்​றார்.

பாஜக தரப்​பில் இப்​படிச் சொன்​னாலும் புதுச்​சேரி​யில் என்​டிஏ கூட்​ட​ணிக்கு தலை​வ​ராக இருக்​கும் முதல்​வர் ரங்​க​சாமி வாய் திறக்​காமல் இருக்​கி​றார். அவர் என்ன சொல்​கி​றாரோ அது​தான் இறுதி முடிவு என்​கி​றார்​கள் என்​.ஆர்​.​காங்​கிரஸ்​காரர்​கள். ஆனால் எதற்​கும் அசைந்து கொடுக்​காத ரங்​க​சாமியோ, “தேர்​தல் நேரத்​தில் தான் கூட்​டணி பற்றி பேசுவோம்” என்​கி​றார்.

தமி​ழ​கத்​தில் மீண்​டும் பாஜக-வுடன் அதி​முக கூட்​டணி அமைத்​திருப்​ப​தால் புதுச்​சேரி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் இல்​லா​விட்​டாலும் என்​டிஏ கூட்​ட​ணி​யில் அதி​முக தொடர்​வது உறு​தி​யாகி​விட்​டது. ஆனால், இந்த முடி​வில் புதுச்​சேரி அதி​முக-​வினர் யாரும் அத்​தனை மகிழ்ச்​சி​யாக இல்​லை. 2021-ல், போட்​டி​யிட்ட ஐந்து தொகு​தி​களி​லும் தோற்ற அதி​முக-வுக்கு என்​டிஏ-​யில் அங்​கம் வகிக்​கும் கட்சி என்ற முறை​யில், வாரி​யத் தலை​வர் பதவியையோ, நியமன எம்​எல்ஏ பதவியையோ பெற்​றுத் தர பாஜக முயற்சி எடுக்​க​வில்லை என்​பதே அதி​முக-​வினருக்கு இருக்​கும் ஆகப்​பெரும் ஆதங்​கம்.

2024 மக்​கள​வைத் தேர்​தலில் புதுச்​சேரி​யில் அதி​முக தனித்து போட்​டி​யிட்​ட​போது, சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்விக்கு பாஜக-வுடன் கூட்​டணி அமைத்​ததே காரணம் என பிரச்​சா​ரம் செய்​தார்​கள். அதனால், “2026 பேர​வைத் தேர்​தலில் தனித்​துப் போட்​டி​யிட்டு எங்​களது பலத்​தைக் காட்​டு​வோம்” என புதுச்​சேரி அதி​முக-​வினர் மார்​தட்டி நின்ற நிலை​யில், எதிர்​பா​ராத திருப்​ப​மாக அதி​முக - பாஜக கூட்​டணி அமைந்​து​விட்​டது. இதை தங்​களுக்கு ஏற்​பட்ட பின்​னடை​வாகவே புதுச்​சேரி அதி​முக-​வினர் கருதுகின்​ற​னர்.

பாஜக கூட்​ட​ணியை ஏற்​காமல் அதி​முக-வை விட்டு வில​கிய முன்​னாள் எம்​எல்​ஏ-​வான அசனா, “பாஜக கூட்​ட​ணி​யால்​தான் 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் வெற்​றி​வாய்ப்பை இழந்​தோம். தோல்விக்கு பாஜக கூட்​ட​ணி​தான் காரணம் என்​ப​தால் தான் பாஜக-வுடன் கூட்​டணி இல்லை என முடி​வெடுக்​கப்​பட்​டது. அதை மறந்​து​விட்டு மீண்​டும் பாஜக-வுடன் கூட்​டணி சேர்ந்​ததை என்​னால் ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்​லை” என்​றார்.

2026-ல் போட்​டி​யிட திட்​ட​மிட்டு தொகு​திக்​குள் வேலை செய்து வந்த அதி​முக-​வினர் பலரும் தற்​போது, தங்​களுக்கு போட்​டி​யிட தொகுதி கிடைக்​கு​மா... சிறு​பான்​மை​யினர் வாக்கு கிடைக்​குமா என்​றெல்​லாம் கவலைப்பட ஆரம்​பித்​து​விட்​டார்​கள். ஏற்​கெனவே கோஷ்டிகளால் கலகலத்​துக் கிடக்​கிறது புதுச்​சேரி அதி​முக. இந்த நிலை​யில் மீண்​டும் பாஜக கூட்​ட​ணிக்​குள் வந்​திருப்​ப​தால் இம்​முறை​யும் பேர​வைக்​குள் செல்​லும் வாய்ப்பை இழந்​து​விடு​வோமோ என அச்​சப்​பட்​டுக் கொண்​டிருக்​கி​றார்​கள் அதி​முக-​வின் அடிமட்​டத் தொண்​டர்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x