Last Updated : 16 Apr, 2025 09:27 AM

3  

Published : 16 Apr 2025 09:27 AM
Last Updated : 16 Apr 2025 09:27 AM

மீண்டும் பாமக தலைவராகிறாரா அன்புமணி? - முடிவுக்கு வருகிறதா அப்பா - பிள்ளை நிழல் யுத்தம்?

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் எடுத்த அதிரடியானது பாமக-வுக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கட்சியின் பொருளாளர் திலகபாமா, ‘பாமக ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. அய்யாவின் இந்த முடிவு தவறு’ என முகநூலில் பகிரங்கமாக வெடித்தார். அவருக்கு கடுமையாக ரியாக் ஷன் காட்டிய பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ‘நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி மருத்துவர் ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது’ என்று அனல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதனிடையே, ‘பொதுக்​குழு​வால் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்ட என்னை ஒற்றை அறிக்​கை​யின் மூலம் நீக்​கி​விட முடி​யாது. நானே பாமக தலை​வ​ராக தொடர்​கிறேன். 2026-ல் பாட்​டாளி சொந்​தங்​கள் விரும்​பும் வலி​மை​யான கூட்​ட​ணியை மருத்​து​வர் அய்யா அவர்​களது வழி​காட்​டு​தலுடன் அமைக்க வேண்​டியது எனது பெரும் கடமை​யாகும்’ என அன்​புமணி​யும் அறிக்கை ஒன்றை வெளி​யிட்​டது பாமக-​வினரை மேலும் குழப்​பத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது.

இதுகுறித்து பாமக தரப்​பில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “2022 மே மாதம் அன்​புமணியை கட்​சித் தலை​வ​ராக்​கிய அய்யா ராம​தாஸ், மகனிடம் நிறையவே எதிர்​பார்த்​தார். ஆனால், அவர் எதிர்​பார்த்த அளவுக்கு அன்​புமணி​யால் கட்​சியை கொண்டு செலுத்த முடிய​வில்​லை. இந்த நிலை​யில், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாமக தோல்வி முகம் கண்​டது. அந்​தத் தேர்​தலில் அதி​முக கூட்​டணி என்ற அய்​யா​வின் முடிவுக்கு மாறாக அன்​புமணி பாஜக உடன் கூட்​டணி அமைத்​ததும் சரி​வுக்கு முக்​கிய காரணம்.

அதன்​பிறகு, அறிக்​கை​கள் மூல​மாகவே அரசி​யல் நடத்தி வரும் அய்​யா, கட்​சிக்​குள் நடப்​பதை அறிந்து கொள்​ளவே பேரன் முகுந்​தனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக அறி​வித்​தார். ஆனால், அதை அன்​புமணி பகிரங்​க​மாக எதிர்த்​தார். அன்​புமணி​யின் இரண்​டாவது மகள் சம்​யுக்​தா​வின் கணவர் டாக்​டர் பிரதீவனை இளைஞர் சங்க பதவிக்கு கொண்​டுவர நினைத்​தார் அன்​புமணி.

அதற்கு மாறாக, பிரதீவனின் தம்பி முகுந்​தனை நியமித்​தது அவருக்​குப் பிடிக்​க​வில்​லை. மரு​மகன் பிரதீவனுக்கு இல்​லா​வி​டாலும் தனது இளைய மகள் சஞ்சுத்​ராவை அந்​தப் பதவி​யில் அமர்த்​தலாம் என்​பதும் அன்​புமணி​யின் இன்​னொரு பிளான். ஆனால், அதை​யும் அய்யா அவ்​வள​வாய் விரும்​ப​வில்​லை.

அய்​யாவை பொறுத்​தவரை வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்​கீடு வாங்​கிக் கொடுத்​து​விட வேண்​டும் என்​ப​தில் தீர்​மான​மாக இருக்​கி​றார். கூட்​ட​ணிக்கு அழைக்​கும் கட்​சி​யிடம், இது தொடர்​பாக தெளி​வான உத்​தர​வாதத்​தைப் பெற்​று​விட வேண்​டும் என்​ப​தி​லும் அவர் முனைப்​புடன் இருக்​கி​றார். ஆனால் அன்​புமணி, பாஜக கூட்​ட​ணிக்கே ஆர்​வ​மாய் இருக்​கி​றார். இதில் அவரது சுயநல​மும் இருக்​கிறது.

ஆனால் அய்​யா, திமுக-வுடன் பேசிப்​பார்த்​தால் என்ன என்று நினைக்​கி​றார். அதனால் தான், அண்​மைக்​கால​மாக திமுக ஆட்​சிக்கு எதி​ராக கடுமை​யான அறிக்​கை​களை குறைத்​துக் கொண்டு ‘அட்​வைஸ்’ அறிக்​கை​களை விட்​டுக்​கொண்​டிருக்​கி​றார். ஆக, கூட்​டணி விஷ​யத்​தில் முடிவு தனதாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே அதி​காரத்தை அய்யா தனது கையில் எடுத்​திருக்​கி​றார்” என்​கி​றார்​கள்.

இன்​னும் சிலரோ, “தெரிந்தோ தெரி​யாமலோ பாஜக வட்​டாரத்​தில் அன்​புமணி நெருக்​க​மாகி​விட்​டார். இந்த நிலை​யில் அவராக அங்​கிருந்து பிரிந்து வந்​தால் அது அவருக்கு சிக்​கலை உண்​டாக்​கும். அதனால், அப்​பா​வும் பிள்​ளை​யும் பேசி​வைத்​துக் கொண்டு இந்த முடிவை எடுத்​திருப்​பது போல் தான் தெரி​கிறது” என்​கி​றார்​கள்.

ஆக ராம​தாஸ், அதி​காரத்​தைப் பறிப்​பது போல் பறித்து மகனை இக்​கட்​டில் இருந்து காப்​பாற்றி இருக்​கி​றார் என்று சொல்​லும் பாமக-​வினர், “இரண்டு தரப்​பிலும் மாறி மாறி சமரசப் பேச்​சு​வார்த்தை நடப்​ப​தால் கூடிய சீக்​கிரமே, ‘அன்​புமணியே தலை​வ​ராக தொடர்​வார்’ என அய்​யா​விட​மிருந்து எந்த நேரத்​தி​லும் இன்​னொரு அறிக்கை வரலாம்” என்​கிறார்​கள்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x